

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சரிவை நோக்கியே சென்றது. ஆனால் ஏப்ரல் 30-ம் தேதி மாலையில் ஒரு கிராம் ரூ.200-ம், ஒரு சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. தங்கம் மட்டுமின்றி, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.270-க்கு விற்பனையானது.
இந்நிலையில் உழைபாபாளர் தினமான நேற்று (மே 1) தங்கத்தின் விலை ரூ.400 குறைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலையே தங்கத்தின் விலை மீண்டும் ரூ.1,040 குறைந்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.
நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,920-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,440 குறைந்து ரூ.1,11,360-க்கும் விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.
இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (மே 2) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து, ரூ.1,12,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.14,000-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.270-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.640 உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.