

திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்து வருகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர், 2026 தேர்தல் அறிக்கையை ‘தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்’ என்றும் தெரிவித்துள்ளார். பரப்புரையில் பேசிய பிறகு, தனது எக்ஸ் தளப் க்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார். திருச்சியில் 9 வேட்பாளர்களையும் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி முதல்வர் பரப்புரை செய்தார்.
முதல்வரின் எக்ஸ் பக்கத்தில், “திருச்சிக்கு திராவிட மாடல் அரசு நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!” எனத் தெரிவித்துள்ளார்.