# BIG BREAKING: அமெரிக்காவின் விக்டோரியா ராணுவ தளத்தை தாக்கியது ஈராக்.!

Iraq hits America's Military Base
Iraq
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக்குழு, பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விக்டோரியா ராணுவ தளத்தின் மீது சற்றுமுன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வரும் மேற்காசிய போரால், கச்சா எண்ணெய் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது.

இன்று அதிகாலை குவைத் சர்வதேச விமான நிலையத்தை ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈராக் ஆயுதக்குழு அமெரிக்காவின் விக்டோரியா ராணுவ தளத்தை தாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: தவெக வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றம்.!
Iraq hits America's Military Base

ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால், ஈரானை முழுமையாக அழித்து விடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரான் மீதான போர் குறித்து நாளை டிரம்ப் முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று விக்டோரியா ராணுவ தளத்தை ஈராக் தாக்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போர் இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மொடக்குறிச்சியில் களமிறங்கும் அண்ணாமலை.! பாஜக-வின் பலே திட்டம்.!
Iraq hits America's Military Base
logo
Kalki Online
kalkionline.com