#JUST IN: பதற்றமான வாக்குச் சாவடிகள் - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

2026 Election
Election Commission
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டின் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள சூழலில் வாக்குச்சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளுக்கும் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 5,938 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 4,079 வாக்குச் சாவடிகளில் 835 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: பறக்கும் படை வேட்டை: ரூ.1,200 கோடியை தாண்டிய பறிமுதல் - உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு!
2026 Election

வாக்குச் சாவடிகள் பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணையம் கறுகையில், “தமிழ்நாட்டில் 5,938 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால், பிரச்சினைகளைத் தடுக்க ஏதுவாக இருக்கும்.

இருப்பினும் அரசியல் கட்சியினர் மோதலைத் தடுக்கவும் போலீஸ் தீவிரமாக செயல்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விருதுநகர் வெடி விபத்திற்கு காரணம் இதுதான்.! வெளியானது முதல் தகவல் அறிக்கை.!
2026 Election
logo
Kalki Online
kalkionline.com