#JUST IN: விஜய்யின் பரப்புரை ரத்து: மாற்று வழியில் தவெக வேட்பாளர்கள்.! ஆதரவு குரல் கொடுத்த அண்ணாமலை.!

Annamalai Suppots to vijay
Tvk vijay
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தவெக, தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் தலைவர் விஜய்யின் பரபபுரை தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், தவெக வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் வாக்கு சேகரிக்கவும், பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் மாற்று வழியில் தவெக வேட்பாளர்கள் இறங்கியுள்ளனர். இதன்படி ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் விஜய் போன்ற உருவத்தை உருவாக்கி கும்பகோணம் தொகுதி வேட்பாளர் பிரச்சாரம் செய்தார். அதேபோல் சென்னை கொளத்தூரில் விஜய் போன்றே வேடம் அணிந்த ஒருவரை பிரசசார வாகனத்தில் ஏற்றி பரப்புரை செய்யபபட்டது.

இன்னும் சில தொகுதிகளில் விஜய்யின் கட் அவுட்டை வைத்தே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பிரச்சாரத்திற்கு விஜய்யின் முகம் ஒன்றே ஆதாரம் என்ற அடிப்படையில், தவெக வேட்பாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: "உதயநிதி ஸ்டாலின் முதல்வராக மாட்டார்" பியூஸ் கோயல் அதிரடி கருத்து.!
Annamalai Suppots to vijay

ஒரு நாள் பரப்புரை செய்தால், அடுத்த நாள் ஓய்வு என்ற அடிப்படையிலேயே விஜய்யின் பரப்புரை இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாட்களே இருக்கும் சூழலில், தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

விஜய்யின் பிரச்சாரங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், மாற்று வழியில் களமிறங்கியுள்ளனர் தவெக வேட்பாளர்கள்.

இந்நிலையில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பும், விஜய்யின் பாதுகாப்பும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அமலுக்கு வரும் ஈரான் மீதான கடல்வழி முற்றுகை.! இனி ஹார்மூஸ் தேவையே இல்லை.!
Annamalai Suppots to vijay
logo
Kalki Online
kalkionline.com