வீடு கட்ட உதவும் தமிழக அரசு... உங்களுக்கும் வேண்டுமா..? இந்த ஆவணங்கள் இருந்தால் வீடு நிச்சயம்..!!

kalaignar kanavu illam
kalaignar kanavu illam
Published on

கலைஞர் கனவு இல்லம் திட்டம் (Kalaignar Kanavu Illam) என்பது, தமிழகத்தில் குடிசை இல்லாத கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழ்நாடு அரசின் ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளைக் கட்டித் தருவதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுள்ள பயனாளிகள், அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்கள் மற்றும் தகுதி அளவுகோல்களின்படி கிராம சபையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2024-2025-ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேவையான தகுதிகள், ஆவணங்கள்:

* கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பலன் பெற விரும்பும் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டியது கட்டாயம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம்..!
kalaignar kanavu illam

* வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.

* 300 சதுரடி ஆர்சிசி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும்.

* ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது.

* ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

* வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

* மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது. செலவை குறைக்கும் தொழில்நுட்பங்கள், விரைவான கட்டுமானம் போன்றவை அனுமதிக்கபடுகிறது.

* இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.

* இந்த குழு அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதிகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதியானவர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களே சேர்க்க வேண்டும்.

விடுபட்டவர்கள் பட்டியலுக்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

* பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் (ஊரகம்) 25 முதல் 50 வீடுகள் நிலுவையில் இருந்தால் அந்த ஊராட்சி இந்த ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்ல திட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படாது.

* இலவச வீடு வழங்கும் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் இருக்கும் ஏழைகள், வீடு இல்லாதவர்கள், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், ஓட்டு வீட்டில் இருப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

ரேஷன் கார்டு

ஆதார் அட்டை

பான் கார்டு

வாக்காளர் அடையாள அட்டை

விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

வருமானச் சான்றிதழ்

வங்கி கணக்கு விவரங்கள்

முகவரி சான்று

தற்போதைய குடிசை வீட்டில் வசிப்பவராக இருந்தால் அதற்கான ஆதாரம்.

இதையும் படியுங்கள்:
கலைஞர் கனவு இல்லம் : 10 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி... விண்ணப்பிப்பது எப்படி?
kalaignar kanavu illam

சொத்து தொடர்பான ஆவணங்கள்:

வீட்டிற்கான பட்டா & சிட்டா நகல்

வீட்டு பத்திரம் நகல்

சொந்த இடத்திற்கான பட்டா (பட்டா எண்).

சொத்தின் சர்வே எண்.

ஜிபிஎஸ் வரைபடம் (GPS map).

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது இந்த ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com