பொதுமக்கள் ஷாக்..! இனி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலையை ஆன்லைனில் பார்க்க முடியாது..!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள முடியாத வகையில், அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்
Published on

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பர்களில் தகுதியானவர்களை மட்டும் அடையாளம் கண்டு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாயம் ரூ.1000 கொடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலமாக இதுவரை மகளிர் உரிமைத்தொகைக்காக மட்டும் சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருப்பதாகவும், இந்த மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் 15-ம்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்களை அரசு தற்போது தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
80% பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கப்போவதில்லை - அண்ணாமலை திட்டவட்டம்
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்

அதேபோல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான அனைத்து தகுதிகளும் இருக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் மற்றவை நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே புதிய பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதால் தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பத்தின் நிலை குறித்த முக்கிய அப்டேட் இந்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் இருந்து வர வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதேபோல் https://kmut.tn.gov.in/index.html என்ற அரசின் இணையதள முகவரிக்கு சென்று உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ளும் வகையில் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகைக்கான உங்களுடைய விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதியை அரசு திடீரென நீக்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள், இதுவரை தங்களின் விண்ணப்பத்தின் நிலையை இந்த ஆன்லைன் முகவரிக்கு சென்று அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தற்போது இந்த வசதி நீக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

அரசின் வெப்சைட்டுக்கு சென்றால் முகப்பு பக்கத்தில் ‘உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய’ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்தால் அதில், ‘அதிகாரிகள் உள்நுழைவு’, ‘பொதுமக்கள் உள்நுழைவு’ என்ற இரு ஆப்ஷன்கள் வரும். அதில், ‘பொதுமக்கள் உள்நுழைவு’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்கள் அவர்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் அவர்களுக்கு ஒரு ஓடிபி(OTP)வரும். அந்த ஓடிபிவை இணையதளத்தில் பதிவு செய்தால் உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் தற்போது ‘பொதுமக்கள் உள்நுழைவு’ என்று ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த பெண்கள், தங்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இணையதளத்தில் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு பணம் கிடைக்காதோ என்ற சந்தேகமும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
‘மகளிர் உரிமைத்தொகை’ கேட்டு 15 லட்சம் பெண்கள் மனு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம்

செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மகளிர் உரிமைத்தொகைக்கான அட்டேட் வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அரசின் அதிகாரப்பூர்வ வெட்சைட்டில் இருந்து பொதுமக்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளும் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com