வண்டியை வித்தா மட்டும் போதாது! 47 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கோர்ட்.. நடந்தது என்ன?

வாகனத்தை விற்றுப் பணம் பெற்றுக்கொண்டாலும், அரசு ஆவணங்களில் (RC) பெயர் மாற்றப்படும் வரை பழைய உரிமையாளரே சட்டப்படி பொறுப்பாளி.
Court order
Court order
Published on

ஒரு வாகனத்தின் உரிமை மாற்றம், அதன் பதிவுச் சான்றிதழில் (RC) அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும் வரை, அந்த வாகனத்திற்கான பொறுப்பு பதிவு செய்யப்பட்ட உரிமையாளரிடமே நீடிக்கும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது விபத்து ஏற்பட்டால் பெயர் மாற்றப்படும் வரை மோட்டார் சைக்கிள் உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.ஜி. பண்டிட் மற்றும் கே.வி. அரவிந்த் ஆகியோரைக் கொண்ட ஒரு அமர்வு, உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றைச் சுட்டிக்காட்டி, சமீபத்தில் இந்தக் கருத்தைப் பதிவு செய்தது.

பெங்களூரு மாரத்தஹள்ளியைச் சேர்ந்த சுனில்குமார் என்பவர் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி சிறிது காலத்திற்கு பிறகு சப்ரீஸ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் பைக் வாங்கிய ஷப்ரேஸ் ஆவணங்களில் அவரது பெயருக்கு மாற்றாமல் பழைய உரிமையாளராக சுனில்குமாரின் பெயரே இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி சப்ரீஸ் மோட்டார் சைக்கிள் மோதி பெங்களூருவைச் சேர்ந்த ஹனுமந்த் என்பவர் உயிரிழந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் (Motor Accident Claims Tribunal) விசாரணைக்கு வந்தது. தீர்ப்பாயம், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ரூ. 33 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டதுடன், அந்தத் தொகையைச் செலுத்துவதற்கு குமார் மற்றும் ஷப்ரேஸ் ஆகிய இருவருமே கூட்டாகப் பொறுப்பாவார்கள் என்றும் தீர்ப்பளித்தது.

இதையும் படியுங்கள்:
Second-Hand பைக் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
Court order

தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை குமார் மற்றும் ஷப்ரேஸ் ஆகிய இருவருமே எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

அனுமந்தாவின் குடும்பத்தினர், உயிரிழந்தவர் தாக்கல் செய்த வருமான வரி விவரங்களைச் சுட்டிக்காட்டி, தனியாக ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். ஹனுமந்தாவிடம் மண் அள்ளும் இயந்திரங்கள் (earthmover equipment) இருந்தன; மேலும் அவர் ஒரு மதுபானக் கடையில் விற்பனையாளராகவும் பணியாற்றி வந்தார்.

மேலும் அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு இன்னும் குமாரின் பெயரிலேயே நீடிப்பதைச் சுட்டிக்காட்டிய அமர்வு, இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு குமாரே பொறுப்பாவார் என்று குறிப்பிட்டு, ரூ.47 லட்சத்தை முழுமையாகச் செலுத்துமாறு, மாரத்தஹள்ளியைச் சேர்ந்த சுனில் குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், தான் அந்த வாகனத்தை ஷப்ரேஸ் என்பவருக்கு விற்றுவிட்டதாக குமார் தரப்பில் வாதிடப்பட்டது; ஆனால் ஷப்ரேஸ் அந்த விற்பனை நடந்ததையே மறுத்தார்.

இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது, ​​உயிரிழந்தவர் தாக்கல் செய்த வருமான வரி விவரங்களின் அடிப்படையில், அவரது சராசரி ஆண்டு வருமானத்தை (ரூ. 2.9 லட்சம்) கணக்கில் எடுத்துக்கொண்டதில் தீர்ப்பாயம் தவறிழைத்துவிட்டதாக உயர்நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது. வருமானத்தில் படிப்படியான உயர்வு இருந்திருந்து, விபத்து நிகழ்வதற்கு முன்பாகவே அந்த வருமான வரி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதிகபட்ச வருமானத்தைக் காட்டும் சமீபத்திய வருமான வரி விவரத்தையே இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கான அடிப்படையாகக் கொள்ளலாம். இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கு, நிலையான வருமானமே அடிப்படையாக அமைய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம் என்று அந்த அமர்வு தெரிவித்தது.

எனவே தான் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக ரூ. 14 லட்சம் உயர்த்தி வழங்கியதாக, ​​அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஹனுமந்தாவின் குடும்பத்தினர் மற்றும் ஷப்ரேஸ் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்மூலம் தெரியவரும் உண்மை என்னவென்றால், ஆர்சி புத்தகத்தில் யாருடைய பெயர் இருக்கிறதோ, அவரே அந்த வாகனத்தின் உண்மையான உரிமையாளர் ஆவார். எனவே நீங்கள் உங்களுடைய வண்டியை விற்று அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டாலும், அரசு ஆவணங்களில் உங்களுடைய பெயர் மாற்றப்படாதவரை சட்டப்படி நீங்களே பொறுப்பாளி என்று சட்டம் சொல்கிறது.

இதையும் படியுங்கள்:
உச்ச நீதிமன்றத்தின் அசத்தலான உத்தரவு! : வாகனத்தின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்ற கவலை இனி வேண்டாம்!
Court order

எனவே கர்நாடகாவில் நடந்த இந்த சம்பத்தின் மூலம், வண்டியை வாங்கியவர் விபத்து ஏற்படுத்தினால், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை தர வேண்டிய கட்டாயம் ஆர்சி புத்தகத்தில் பெயர் இருக்கும் பழைய உரிமையாளரரையே சேரும் என்பதை மறக்க வேண்டாம். எனவே உங்கள் வண்டியை விற்பனை செய்த உடன் ஆர்சி புத்தகத்தில் உங்கள் பெயரை மாற்றி விடுவதன் மூலம் பிற்காலத்தில் பிரச்சனை வராமல் தப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com