
கேதார்நாத் கோவில் (Kedarnath Temple) இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புராதனமானதாகவும், இந்து இதிகாசங்களில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் நம்பப்படுகிறது. காசி, ராமேஸ்வரத்தை விட அதிமுக்கியமான திருத்தலமாக கருதப்படுவது கேதார்நாத் பனிலிங்க சிவன் கோவில்.
இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரை மட்டுமே திறந்திருக்கும். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவிலை நேரடியாக சாலை வழியாக செல்ல முடியாது. சோன்மார்க் மற்றும் கேதார்நாத் இடையே 1135 கிமீ சாலை தூரம் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் இல்லை, எனவே சாலை வழியாக பயணிக்க வேண்டும்.
பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலம் சோன்மார்க் முதல் கேதார்நாத் வரை 12.9 கி. மீட்டர் நீளத்திற்கு சுமார் ரூ.4,081 கோடி செலவில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அற்புத திட்டத்தை அதானி குழுமம் நடைமுறைப்படுத்த உள்ளது. நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்து பணியை தொடங்கி இருக்கிறது அதானி குழும நிறுவனம்.
கடுமையான மலைப்பகுதியில் கடுமையான குளிருக்கு இடையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது வாழ்நாள் கனவான கேதார்நாத் பனிலிங்க சிவனை சென்று தரிசனம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். நீண்ட தூர மலைப்பணயம், எல்லோருக்கும் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும்.
தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை பக்தர்கள் கடக்க 9 முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது. அந்த வகையில் கடுமையான குளிருக்கு நடுவில் கேதார்நாத் கோவிலுக்கு இனிமேல் கால்கடுக்க நடந்து போக வேண்டிய தேவையில்லை. பக்தர்களின் சிரமத்தை குறைக்க விரைவில் வருகிறது கேதர்நாத் ரோப் கார் திட்டம்.
பக்தர்களின் அந்த சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சாதாரணமாக நடந்து பயணம் செய்தால் 9ல் இருந்து 12 மணிநேரமாகும் என்ற நிலையில் தற்போது இந்த ரோப் கார் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டால் 36 நிமிடத்தில் கேதார்நாத்தை சென்று அடைந்து விடலாம்.
அதாவது இந்த ரோப் கார் வசதி வந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக உத்தரகாண்ட்டில் உள்ள சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை 12.9 கி.மீட்டர் தூரத்திற்கு ரோப் கார் கட்டமைப்புகளை மலைகளுக்கு இடையே உயரமாக கட்டுமானங்களை தொடங்க அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ரோப் கார் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு ஒரு மணிநேரமும் இனி 1800 பேர் 36 நிமிடத்தில் கேதார்நாத் கோவிலை சென்றடையலாம். அதேபோல் 1800 பேர் 36 நிமிடத்தில் கோவிலில் இருந்து திருப்ப வரலாம். இருவழியிலும் செல்லக்கூடிய ரோப் கார் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் அதுகுறித்த AI காணொளியும் அதானி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ள நிலையில், அதானி நிறுவனம் வருகிற 6 ஆண்டுகளில் இந்த ரோப் கார் திட்டத்தை கட்டமைத்து நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் இனிமேல் இமாலய சிவனை தரிசனம் செய்ய பக்தர்கள் கஷ்டப்படவே தேவையில்லை. இதன் மூலம் 12 மணிநேர கடினமான பயணம் 36 நிமிடங்களாகக் குறையும் என்றும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பக்தர்களுக்கும் கேதார்நாத் செல்லும் பயணத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இனிமேல் வாழ்நாளில் ஒருமுறையாவது கேதார்நாத் செல்ல வேண்டும் என்ற பலரின் கனவு இதன் மூலம் நனவாகும் என்பது நிச்சயம்.