
நடிகை மேனகா - மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், தமிழில் 2015-ல் வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்துக்காக தேசிய விருது பெற்றார். ‘ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார், பெங்குயின், அண்ணாத்தே, மாமன்னன், சைரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தி திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் வருண் தவான் ஜோடியாக இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கான 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் 15 வருடங்களாக காதலித்து வந்த, துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். ஆண்டனி கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து முறைப்படி கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணத்திற்கு தவெக தலைவரான நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இவரது திருமணத்தில் விருந்தினர்கள் அனைவருக்கும் கேரள முறைப்படி விருந்து பரிமாறப்பட்டது.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் ஒன்றாக படிக்கும் போதே நல்ல நண்பர்களாக தொடங்கி பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் நடந்துள்ளது.
இதனையடுத்து பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணத்தின் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமுக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அவர்களின் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை தனது Instagram இல் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் இருவரும் வெள்ளை நிற உடையில் அசத்தலாக காட்சி தருகின்றனர்.
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்… அமரன் பட வெற்றிதான் காரணமாம்!
கீர்த்தி சுரேஷும் ஆண்டனியும் "ForTheLoveOfNyke" என்ற ஹேஷ்டேக் உடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அவர்களின் சிறப்பு நாளின் அழகான தருணங்களைப் பகிர்ந்துள்ளனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ளை நிற கவுனிலும் - ஆண்டனி தட்டில் வெள்ளை நிற ஆடையிலும் உதட்டில் முத்தமிட்டு கொள்ளும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.