கேரளா நிலச்சரிவு: சென்னை பெண் உள்பட 9 பேர் பலி; பதற வைக்கும் காட்சி..!

இடுக்கி, கோட்டயம் பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு; காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேர்!
கேரளா நிலச்சரிவு
Kerala Landslide
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

கேரள மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இடுக்கி மற்றும் கோட்டயம் உள்ளிட்ட 3 இடங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 2 சகேதரர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த 1 பெண் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சென்னையைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.

கேரளாவிற்கு சுற்றுலா சென்று திரும்பிய போது இவர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இதுதவிர மலப்புரத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற 5 பேர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
காலையிலேயே பரபரப்பு.!! பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு: DPI-யின் டிஜிட்டல் மூவ்.!
கேரளா நிலச்சரிவு

இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் மலப்புரத்தில் 5 பேர், இடுக்கியில் 2 பேர், வாகமன் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர்.

ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் கேரளாவில் கனமழை பெய்யும் போது, நிலச்சரிவும் காட்டாற்று வெள்ளமும் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நிலச்சரிவில் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கேரள அரசு மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்பதால், விரைவில் உரிய நிவாரணம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com