2027-ல் 369 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான பக்கிங்ஹாம் அரண்மனையின் புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு, மன்னர்கள் அங்கு வசிக்கும் 189 ஆண்டுகால அரச பாரம்பரியத்தை விடுத்து தானும் ராணி கமில்லாவும் கிளாரன்ஸ் ஹவுஸில் நிரந்தரமாக தங்கப்போவதாக மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார் .
விக்டோரியா காலத்தில் தொடங்கிய மன்னர்களின் பாரம்பரிய மரபுக்கு முற்றுப்புள்ளியாக சார்லசின் இந்த அறிவிப்பு உலக அளவில் கவனம் பெறுகிறது.1837-ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணி இந்த அரண்மனையை மன்னர் அல்லது அரசியின் முதன்மை இல்லமாக மாற்றியதிலிருந்து, பக்கிங்ஹாம் அரண்மனை பிரிட்டனின் ஆட்சியிலுள்ள மன்னரின் அல்லது அரச குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையதாக இருந்து வருகிறது. இருப்பினும், நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அந்த மரபு இப்போது மாறவிருக்கிறது.
அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் பத்தாண்டுகாலப் புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகும், மூன்றாம் சார்லஸ் மன்னரும் கமிலா அரசியும் அதனைத் தங்கள் நிரந்தர இல்லமாக மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று சார்லஸ் எண்ணத்தை அரச குடும்ப அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதற்குப் பதிலாக, 'தி மால்' (The Mall) சாலையில் சிறிது தொலைவிலேயே அமைந்துள்ள, லண்டனில் நீண்ட காலமாகத் தாங்கள் வசித்து வரும் 'கிளாரன்ஸ் ஹவுஸ்' (Clarence House) இல்லத்திலேயே அவர்கள் தொடர்ந்து வசிப்பார்கள். இதன் மூலம், விக்டோரியா மகாராணிக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மாற்றாக வேறொரு இல்லத்தை லண்டனில் தங்கள் முதன்மை இல்லமாகத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கும் முதல் பிரிட்டிஷ் மன்னராக சார்லஸ் திகழவுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையின் சிறப்பு :
1820-களில் கட்டப்பட்ட இந்த அரண்மனை, 1837-இல் விக்டோரியா மகாராணி அரியணை ஏறிய பிறகு, மன்னர் அல்லது அரசியின் அதிகாரப்பூர்வ லண்டன் இல்லமாக மாறியது. அப்போதிருந்து, பிரிட்டனின் ஒவ்வொரு மன்னரும் பக்கிங்ஹாம் அரண்மனையையே தலைநகரில் தங்கள் முதன்மை இல்லமாக அமைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்த அரண்மனை அரச குடும்பத்தின் இல்லமாகவும், அதே சமயம் முடியாட்சியின் நிர்வாக மையமாகவும் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது சிறப்பு.
காலப்போக்கில், இந்த அரண்மனை வெறும் வசிப்பிடமாக மட்டுமல்லாமல் அதையும் தாண்டிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. இது நாட்டின் மிகவும் அடையாளம் காணக்கூடிய முக்கிய சின்னங்களில் ஒன்றாகவும், பிரிட்டிஷ் முடியாட்சியின் சர்வதேச அடையாளமாகவும் மாறியதாகவும் அறியப்படுகிறது.
அதன் புகழ்பெற்ற மேல்மாடம் எண்ணற்ற வரலாற்றுத் தருணங்களுக்குச் சாட்சியாக இருந்துள்ளது. அரச திருமணங்கள், தேசிய வெற்றிகள் மற்றும் பொன்விழாக்களைக் கொண்டாட அதன் வாயில்களுக்கு வெளியே மக்கள் திரண்டுள்ளனர். அதே சமயம், 'தி மால்' வழியாகச் செல்லும் ஊர்வலங்கள், அந்த அரண்மனையை பிரிட்டனின் விழாக்கால வாழ்வின் மையப் புள்ளியாக மாற்றியுள்ளது எனக் கருதப்படுகிறது.
பக்கிங்ஹாம் அரண்மனை தேசிய கொண்டாட்டங்களின் மையப் புள்ளியாக விளங்கியதற்கான மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது இரண்டாம் எலிசபெத் மகாராணி அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகளைக் குறித்த பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் .
இங்கு வருகை தரும் ஜனாதிபதிகள், மன்னர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க அரச அறைகளுக்குள் நடைபெறும் விரிவான அரச விருந்துகளிலும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், பேரரசி அங்கு வெளிநாட்டுப் பிரமுகர்களைத் தவறாமல் வரவேற்பதுடன், அதிகாரப்பூர்வ சந்திப்புகளையும் நடத்துவதுண்டு.
திரைக்குப் பின்னால் மன்னரின் அரசியலமைப்பு, தூதரக மற்றும் நிர்வாகப் பொறுப்புகளுக்கு ஆதரவளிக்கும் அரச அதிகாரத்துவத்திற்கான அலுவலகங்களையும் தன்னகத்தே கொண்டபக்கிங்ஹாம் அரண்மனை அரச குடும்பத்தின் தலைமையகமாகவும் செயல்படுகிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க அரண்மனையை விடுத்து மன்னர் சார்லஸ் ஏன் கிளாரன்ஸ் ஹவுஸைத் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். பதில் மாற்றம் என்பது மன்னர் பரம்பரையிலும் உண்டு என்பது மட்டுமே.

அடுத்த ஆண்டு புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் குடிபெயர்வதற்குப் பதிலாக, மன்னர் சார்லஸும் ராணி கமிலாவும், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சார்லஸ் வசித்து வரும் லண்டன் இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸிலேயே தொடர்ந்து வசிக்கும் முடிவை எடுத்துள்ளனர். மன்னர், வேல்ஸ் இளவரசராக இருந்தபோதே 2003-ல் கிளாரன்ஸ் ஹவுஸுக்குக் குடிபெயர்ந்தார், அன்று முதல் அந்த சொத்து அவரது பிரதான லண்டன் இல்லமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஒரு குறுகிய நடை தூரத்தில் அமைந்துள்ள கிளாரன்ஸ் ஹவுஸ், முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை சூழலை வழங்குகிறது. புகழ்பெற்ற கட்டிட கலைஞர் ஜான் நாஷால் வடிவமைக்கப்பட்டு, 1825 மற்றும் 1827-க்கு இடையில் கட்டப்பட்ட இந்த நான்கு மாடி ரீஜென்சி பாணி இல்லம், பக்கிங்ஹாம் அரண்மனையை விட சிறியது. ஐந்து படுக்கையறைகளை மட்டுமே கொண்டிருப்பதால், அரண்மனையின் பிரம்மாண்டமான அளவோடு ஒப்பிடுகையில், இது மிகவும் நெருக்கமான மற்றும் நிர்வகிக்க எளிதான இல்லமாக நீண்ட காலமாக கருதப்பட்டு வருகிறது.
பல தசாப்தங்களாக பக்கிங்ஹாம் அரண்மனை வெறும் இல்லம் என்பதை தாண்டிப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. நாட்டின் மிகவும் அடையாளம் காணக்கூடிய முக்கிய இடமாகவும், பிரிட்டிஷ் முடியாட்சியின் சர்வதேச அடையாளமாகவும் மாறியது. இருப்பினும் விக்டோரியா மகாராணிக்கு பிறகு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மாற்றாக வேறொரு இடத்தை லண்டனில் தனது முதன்மை இல்லமாக தேர்ந்தெடுக்கும் முதல் பிரிட்டிஷ் மன்னராக சார்லஸ் கால மாற்றத்தின் சூழலால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.