கட்டாயமாகும் கிசான் ID: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

PM Kisan ID is mandatory
PM Kisan scheme
Published on

இந்தியாவில் நலிந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் படி ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தான் 20வது தவணைக்கான நிதியை பிரதமர் மோடி வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் விடுவித்தார். இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தில் கிடைக்கும் நிதித் தொகையை உயர்த்தி தர வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு தற்போது மத்திய அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஏழை விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள பிஎம் கிசான் நிதி உதவுகிறது‌. இந்நிலையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 நிதித் தொகையை ரூ‌.8,000 அல்லது ரூ.10,000 ஆக உயர்த்தி தர வேண்டும் என நாடு முழுவதும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இத்தனை நாட்கள் இதற்கு மௌனம் சாதித்து வந்த மத்திய அரசு, தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதித் தொகையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என பதில் அளித்துள்ளது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சரான ராம்நாத் தாக்கூர் மக்களவையில் இதுகுறித்து கூறுகையில், “பிஎம் கிசான் திட்ட நிதியை இப்போதைக்கு உயர்த்திக் கொடுக்க மத்திய அரசு தயாராக இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த போலியான நபர்களை அரசு கண்டுபிடித்து நீக்கியுள்ளது. மேலும் இதுபோன்ற போலியான நபர்கள் பிஎம் கிசான் நிதியைப் பெறாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் கிசான் ஐடியை வழங்க வேண்டியது கட்டாயமாகும்.

இதன்படி முதற்கட்டமாக 14 மாநிலங்களில் விவசாயிகளிடம் இருந்து கிசான் ஐடி பெறப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில் இருந்து புதிதாக பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு கிசான் ஐடி வழங்கப்படும். விரைவில் அனைத்து மாநில விவசாயிகளுக்கும் கிசான் ஐடி வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
PM கிசான் திட்டம்: ஒரே குடும்பத்தில் எத்தனை விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்கும்?
PM Kisan ID is mandatory

பிஎம் கிசான் நிதி உயர்த்தப்படாது என மத்திய அரசு தெரிவித்திருப்பதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6,000 நிதியுதவி போதுமானதாக இல்லை என்பதே விவசாயிகளின் வாதமாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால், இப்போதைக்கு ரூ.6,000 மட்டுமே கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளுக்கு உதவும் இலவச கிசான் கால் சென்டர்!
PM Kisan ID is mandatory

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com