

அசாம் மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து மிசோரம் மாநிலத்தின் சைரங் நோக்கிச் சென்ற 'கொல்கத்தா - சைரங் எக்ஸ்பிரஸ்' ரயில் திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நடைபெற்ற தருணத்தில், ரயிலின் என்ஜின் ஓட்டுநர் பகுதியிலிருந்து (Cabin View) பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலம் சாய்ராங்கில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், இன்று காலை இன்ஜின் உட்பட ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.ரயில் பெட்டிகள் தடம் புரண்டது தொடர்பாக உடனடியாக வடகிழக்கு எல்லை ரயில்வேயின் முத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு எல்லை ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர்.
எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததே ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில், “இன்று காலை சுமார் 6.54 மணியளவில், மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக அசாமில் உள்ள திகரு ரயில் நிலையத்தில் ரயில் எண் 13125 கொல்கத்தா - சாய்ராங் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த முயன்றபோது, லோகோ பைலட்டால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் விளைவாக, ரயிலின் இன்ஜின் உட்பட 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
மேலும், ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த ரயிலில் பயணித்த பயணிகள் மாற்று ரயில் மூலம் அவரவர் சேர வேண்டிய இடங்களுக்கு அழைத்து செய்யப்படுகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரயில்வேயின் பொது மேலாளர் மற்றும் மற்ற அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது தொடர்பாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கபிஞ்சல் கிஷோர் சர்மா கூறியபோது, “கொல்கத்தா - சாய்ராங் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
ரயில் தடம் புரண்டது: அசாம் மாநில எல்லைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.
கேபின் வீடியோ காட்சி: ரயில் தடம் புரளும் போது என்ஜினின் முன்பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட காட்சியில், ரயில் கட்டுப்பாட்டை இழந்து சாய்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே மீட்புக் குழுவினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.