ஒரு வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! ஹைலோ ஓபன் பட்டத்தை வென்றார் லக்ஷ்யா சென்!

ஹைலோ ஓபன்: சாம்பியன் பட்டம் வென்று லக்ஷ்யா சென் அசத்தல்! சிலிர்க்க வைக்கும் வெற்றி!
Lakshya Sen
Lakshya Sensource:hindu
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் ஹைலோ ஓபன் பட்டத்தை வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.. முந்தைய சுற்றில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ள லக்ஷ்யா சென் அடுத்த சுற்றிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெற்றியை பதிவு செய்வாரா?

விளையாட்டில் வெற்றி என்பது திறமையால் மட்டுமல்ல; தோல்விகளைக் கடந்து மீண்டும் எழும் மன உறுதியாலும் கிடைப்பதாகும். தொடர்ந்து பல சவால்களைச் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியால் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறார் இந்தியாவின் இளம் பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென். ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் 2026 போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் பின்னணி, இறுதிப்போட்டியில் அவர் வெளிப்படுத்திய ஆட்டத்திறன், பட்டத்தை வெல்ல அவர் கடந்து வந்த பாதை ஆகியவற்றை இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

Lakshya Sen
Lakshya Sensource:thesundayguardian

ஜெர்மனியின் சார்ப்ரூக்கன் நகரில் உள்ள சார்லாந்த்ஹாலே அரங்கில் நவம்பர் 1-ம் தேதி நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் லக்ஷ்யா சென்னும் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியும் மோதினர்.

உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் லக்ஷ்யா சென், ஆறாவது இடத்தில் இருக்கும் ஜொனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டதால் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆரம்பம் முதலே இருவரும் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வலைக்கு அருகில் லக்ஷ்யா சென் அடித்த துல்லியமான ஷாட்களும், எதிராளியின் தாக்குதல்களைச் சமாளித்த விதமும் பாராட்டுக்குரியதாக இருந்தன. முதல் செட்டில் கிறிஸ்டி கடுமையாகப் போராடினாலும், 21-17 என்ற புள்ளிக்கணக்கில் லக்ஷ்யா சென் வெற்றி பெற்றார்.

இரண்டாவது செட்டில் அவரது ஆட்டம் இன்னும் வேகம் பெற்றது. எதிராளியின் தவறுகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு புள்ளிகளைக் குவித்தார். இறுதியில் 21-10 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கினார். வெறும் 39 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் சிறப்பு என்னவென்றால், கடந்த 2025 நவம்பரில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற பிறகு, கிட்டத்தட்ட ஓராண்டாக லக்ஷ்யா சென்னுக்கு சர்வதேச சுற்றுப்பயணப் பட்டம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டில் பல போட்டிகளில் ஆரம்பச் சுற்றிலேயே வெளியேறிய அவர், சில உடல்தகுதி சவால்களையும் எதிர்கொண்டார்.

ஆனால் ஹைலோ ஓபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி என அடுத்தடுத்த போட்டிகளில் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றார். அரையிறுதியில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவை 21-17, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இதே போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்துவும் பட்டம் வென்றார். டென்மார்க் வீராங்கனை லைன் க்ஜெர்ஸ்ஃபெல்ட்டை 21-12, 21-14 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஒரே நாளில் இந்தியாவுக்கு இரண்டு ஒற்றையர் பிரிவு பட்டங்கள் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி!

சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமை:

லக்ஷ்யா சென்னின் இந்த வெற்றி தனிப்பட்ட சாதனை மட்டும் அல்ல..இந்திய பேட்மிண்டனு்க்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும்.. குறிப்பாக உலகின் முன்னணி வீரர்களுடன் மோதும் போது தேவைப்படும் மன உறுதியையும்,ஆட்ட நுணுக்கத்தையும் அவர் இந்த போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.

பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு புள்ளியை இழந்து விட்டால் அடுத்த புள்ளியைப் பற்றிய கவனத்தை இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்..சில நேரங்களில் நீண்ட நேரம் நடைபெறும் ரேலிகள் வீரர்களின் உடல் வலிமையையும் மன உறுதியையும் சோதிக்கும்..

அத்தகைய சூழல்களில் பொறுமையுடன் விளையாடுவதும், எதிராளியின் பலவீனத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை மாற்றுவதும் வெற்றிக்கு வழிவகுக்கும்.. லக்ஷ்யா சென்னின் ஆட்டத்தில் இந்த தன்மைகளைக் காண முடிகிறது.. அவருடைய வெற்றி இளம் தலைமுறையினருக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் நல்ல ஊக்கமாக அமையும்..

தோல்வியால் துவண்டு விடாமல் பயிற்சியிலும் முயற்சியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தினால் மீண்டும் சாதிக்க முடியும் என்பதை அவரது பயணம் எடுத்துக் காட்டுகிறது.. இந்த வெற்றியுடன் இந்திய பேட்மிண்டன் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.. அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் அவர் எத்தகைய சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்..

சவால்களை கடந்து வந்த வெற்றி :

இந்த வெற்றிக்கு பின்னால் லக்ஷ்யா சென்னின் விடாமுயற்சியும் கடின உழைப்பும் அடங்கியுள்ளன.. இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வருவதற்கு முன்பே அவர் பல சவாலான ஆட்டங்களைச் சந்தித்தார்.. குறிப்பாக காலிறிதுக்கு முந்தைய சுற்றுகளிலும் காலிறுதியிலும் மூன்று செட் வரை போராட வேண்டியிருந்தது..

ஒவ்வொரு முறையும் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்து வெற்றியைத் தனதாக்கினார்..2026 ல் ஆல் இங்கிலாந்து ஓபன் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தாலும் பட்டம் வெல்ல முடியாத ஏக்கம் அவருக்கு இருந்தது..

இப்போது ஹைலோ ஓபன் வெற்றி அந்த ஏக்கத்திற்குப் பதிலாக அமைந்துள்ளது.. தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு லக்ஷ்யா சென்னின் இந்த சாதனை ஓர் அழகான எடுத்துக்காட்டு!!

தோல்விகள் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்காக அல்ல; அடுத்த வெற்றிக்குத் தயார்படுத்துவதற்காகவே என்பதை லக்ஷ்யா சென்னின் இந்த வெற்றி உணர்த்துகிறது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் மீண்டும் சாதிக்க முடியும் என்பதற்கு அவரது ஆட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ள லக்ஷ்யா சென், இனிவரும் சர்வதேசப் போட்டிகளிலும் பல பட்டங்களை வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்த வாழ்த்துவோம்!!

இதையும் படியுங்கள்:
சூர்யாவின் 'சீன்' டிரெய்லர் ரிலீஸ்: கெரியரின் உச்சத்தில் DSP பதவியை ராஜினாமா செய்யும் இன்பராஜ்!
Lakshya Sen