லியோ அப்டேட்ஸ்! ஒரு மணி நேரத்தில் மில்லியன் வியூஸ்!

லியோ அப்டேட்ஸ்! ஒரு மணி நேரத்தில் மில்லியன் வியூஸ்!

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் ரசிகர்களின் நீண்டஎதிர்பார்ப்பிற்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது.

வாரிசு படத்தின் வெளியான போதே , தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவிய நிலையில், தற்போது, படத்தின் அறிவிப்பு, டைட்டில் உள்ளிட்டவை அறிவிக்க பட்டுள்ளது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை கிளறியுள்ளது.

கடந்த 30ம் தேதி படத்திற்கான அறிவிப்பையும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களையும் தயாரிப்பு தரப்பு வெளியிட்டது. படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ள நிலையில், மற்ற தொழில் நுட்பகலைஞர்கள் குறித்த அப்டேட்களும் வெளியாகின.

முன்னதாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைகொடுத்திருந்தனர். மேலும் லோகேஷின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படமும் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்தப் படத்தின் அறிவிப்பை நீண்ட நாட்களாக படக்குழு வெளியிடாமலேயே இருந்தது. வாரிசு படத்தின் சூட்டிங்கின் இடையிலேயே தளபதி 67 படத்திற்கான அப்டேட் தெரியவந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமலேயே இருந்தது. இதனிடையே தற்போது வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களை கடந்த நிலையில், தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது.

இதையடுத்து அடுத்த நாளே படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும், அடுத்த நாளில் பூஜை ஸ்டில்ஸ் உள்ளிட்டவையும் வெளியாகின. நேற்றைய தினம் இந்த அறிவிப்பு வெளியானது.

நேற்று மாலை 5 மணியளவில் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு லியோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மற்றும் டைட்டில் குறித்த அறிவுப்புகளை படத்தின் ஹீரோ விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

விஜய்யின் இந்த பகிர்வு வெளியிடப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு உள்ளாகவே ஒருமில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இதேபோல லைக்ஸ்களும் ஏறக்குறைய 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதேபோல லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த பதிவு ஏறக்குறைய 7 லட்சம் வியூஸ்களையும் 75 ஆயிரம்லைக்ஸ்களையும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 19ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

தளபதி 67 படத்துக்கு ஏகப்பட்டடைட்டிலை ரசிகர்கள் கெஸ் செய்து வைத்த நிலையில், வித்தியாசமாக ,'லியோ'என்கிற டைட்டிலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார். ப்ரோமோவில் கூர்வாளை சாக்லேட்டால் நிரப்பி அதை தொட்டு ருசித்துப் பார்க்கும் போது பிளடி ஸ்வீட் என விஜய் பேசிய வசனத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக #BloodySweet ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட்செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com