

எல்.ஐ.சி. (LIC) காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க அவ்வப்போது சிறப்புச் சலுகை முகாம்களை நடத்துகிறது. அதில் தாமதக் கட்டணத்தில் (Late Fee) தள்ளுபடி அல்லது சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனிநபர் காலாவதியான பாலிசியின் காப்பீட்டு புதுப்பிப்பதற்காகவும், புதுப்பிக்கவும் மற்றும் அதன் நன்மைகளை தொடர்ந்து பெறுவதற்காகவும் 2 மாத கால சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்ததுள்ளது. பாலிசியை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் முழு காப்பீட்டுத் தொகையும், அதன் பலன்களும் மீண்டும் பெற முடியும்.
2026ஆம் ஆண்டு ஜனவரி 1-ம்தேதி தொடங்கிய இந்த பாலிசி புதுப்பிப்பு திட்டம் வரும் மார்ச் 2-ம்தேதி வரையில் அமலில் இருக்கும் என்று எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்புத் திட்டம், தாமதக் கட்டணத்தில் மிகவும் கவர்ச்சிகரமான சலுகையுடன், இணைக்கப்படாத அனைத்து பாலிசிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
காலாவதியான காப்பீட்டுப் பாலிசிகளுக்கு புத்துயிா் தருவதற்கான சிறப்பு திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி காலாவதியான (தாமதக் கட்டணத்தில்)பாலிசியை புதுப்பிப்பதில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதாவது ரூ.1 லட்சம் வரையிலான காலவதியான பாலிசியை புதுப்பிப்பதற்கு 30 சதவீதம் அல்லது ரூ.3000 வரை தள்ளுபடியும், ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான காலவதியான பாலிசியை புதுப்பிப்பதற்கு 30 சதவீதம் அல்லது ரூ.4000 வரை தள்ளுபடியும், ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் வரையிலான காலவதியான பாலிசியை புதுப்பிப்பதற்கு 30 சதவீதம் அல்லது ரூ.50000 வைர தள்ளுபடியும் செய்யப்படும் என்று எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியான நிலையில் உள்ள மற்றும் பாலிசி காலம் நிறைவடையாத பாலிசிகள் இந்த பிரச்சாரத்தின் கீழ் புதுப்பிக்கத் தகுதியுடையவை. அதே வேளையில் மருத்துவம் அல்லது சுகாதாரத் தேவைகளில் எந்தவித சலுகைகளும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.
சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த முடியாத பாலிசிதாரர்களின் நலனுக்காக இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
சலுகை திட்டத்தின் விதிகளின்படி, முதல் செலுத்தப்படாத பிரீமியத் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் பாலிசிகளை புதுப்பிக்கலாம். எல்ஐசியில் உங்களுடைய சமீபத்திய, சரியான மொபைல் எண், மின்னஞ்சல், என.இ.எஃப்.டி. மற்றும் பான் நம்பர் விரங்களை பதிவு செய்யுங்கள்.
இந்தச் சலுகைகள் வரும் மார்ச் 2-ம்தேதி வரைக்கும் மட்டுமே இருக்கும். மேலும் மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை என்றாலும், பாலிசி வகை மற்றும் காலத்தைப் பொறுத்து விதிமுறைகள் மாறுபடும்; எனவே, மேலும் இதுகுறித்த விவரங்களை அறியவும், உங்கள் பாலிசியை புதுப்பிக்கவும் எல்ஐசி ஏஜென்ட்டை அல்லது அருகில் உள்ள எல்ஐசி கிளையை அணுகுவது அவசியம்.
8976862090 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், (022)68276827 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டும் உங்களுக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
எந்தவொரு சாதகமற்ற சூழ்நிலைகளாலும் சரியான நேரத்தில் பிரீமியங்களை செலுத்த முடியாத பாலிசிதாரர்களின் நலனுக்காக இந்த சிறப்பு சலுகை திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், முழு காப்பீட்டு சலுகைகளைப் பெற பாலிசிகள் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று அது கூறியது.
‘பழைய பாலிசியை புதுப்பித்து காப்பீட்டுத் தொகையை மீட்டெடுப்பது எப்போதும் நல்லது என்றும் எல்ஐசி அதன் பாலிசிதாரர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தையும் மதிக்கிறது’ என்று அது கூறியது.