அரையிறுதி டிரா ஆனால் ஃபைனலுக்குப் போவது யார்? ஐசிசி-யின் 'ரிசர்வ் டே' ரகசியம்.!

Semifinalist - ICC Reserve Day
T20 Worldcup
Published on

பத்தாவது உலகக்கோப்பை டி20 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று (மார்ச் 04) நியூசிலாந்தை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா.

நாளை (மார்ச் 05) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. அரையிறுதி ஆட்டங்களின் போது மழை குறுக்கிட்டு, போட்டி ரத்தனால் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

பொதுவாக ஐசிசி நடத்தும் தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மழை பெய்தால் ரிசர்வ் டே-யில் போட்டி நடைபெறுகிறது வழக்கம். அதேபோல் இம்முறையும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இருக்கிறது.

பலம் வாய்ந்த 4 அணிகள் அரையறுதி போட்டியில் மோதவிருப்பதால் அரையிறுதி ஆட்டங்கள், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முதல் உலகக்கோப்பையை வெல்லும் கனவோடு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி நாக் அவுட் சுற்றுகளில் நியூசிலாந்தை தென் ஆப்பிரிக்கா இதுவரை வீழ்த்தியதே இல்லை என்ற மோசமான வரலாற்றுடன், இன்றைய போட்டியில் வெற்றிக்காக களம் காணப் போகிறது தென்னாப்பிரிக்கா.

நாளை நடைபெறும் மற்றொரு அரையறுதி போட்டியில் 2 முறை சாம்பியனான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள், மும்பை வான்கடை மைதானத்தில் மோதுகின்றன. கடந்த 2022 மற்றும் 2024 உலக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் மோதின.

2022-ல் இங்கிலாந்து அணியும், 2024-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன. இந்நிலையில் நாளை நடைபெறும் 2வது அரையறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அரையிறுதிப் போட்டிகளின் போது மழை குறுக்கிட்டால், அடுத்த ஆளான ரிசர்வ் டே-யில் போட்டி நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கா - ரஷ்யா போட்டியில் இந்தியாவுக்கு லாபம் கிடைக்குமா.?
Semifinalist - ICC Reserve Day

ரிசர்வ் டே-யிலும் மழை பெய்தால் அன்றைய தினம் 90 நிமிடங்களும், அதற்கு அடுத்த நாள் 120 நிமிடங்களும் கூடுதலாக வழங்கப்படும். ரிசர்வ் டே-யில் போட்டி நடைபெற முடியாமல் போகும் பட்சத்தில், முதல் அரையிறுதி போட்டி வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அன்று 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபறும்.

வெள்ளிக்கிழமையும் மழை பெய்து போட்டி நடைபெற முடியாமல் போகும் பட்சத்தில், சூப்பர் 8 சுற்றில் அதிக வெற்றிகளை பெற்ற அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதே நடைமுறை தான் இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் கடைபிடிக்கப்படும்.

ஒருவேளை மழை பெய்து கடைசி வரை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற முடியாமல் போனால், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்து அணியும் மோதும். ஏனெனில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோடையில் டீ, காபிக்கு 'டாட்டா' சொல்லுங்க! சுகாதாரத் துறை எச்சரிக்கை.!
Semifinalist - ICC Reserve Day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com