ஒருவருக்கு ஒருவித விசித்திரமான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அப்போது அவரின் மூலம் அறியப்பட்டதுதான் லாக்டு-இன்-சிண்ட்ரோம்.
ஒரு அரிய வகை நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்ட அமெரிக்க நபருக்கு விசித்திரமான சில அறிகுறிகள் தோன்றின. 2017ம் ஆண்டு ஒரு அறிய நோயால் பாதிக்கப்பட்ட இவர் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்துள்ளார். அவர் தனது அனுபவம் குறித்து ஒருமுறை பேசியிருக்கிறார்.
சுமார் 10 மாதங்களாக அவரால் சுத்தமாக அசையமுடியவில்லை. வாய் பேச முடியவில்லை. அதில் உரத்த குரல் மற்றும் சமநிலையின்மை போன்றவையும் அடங்கும். முதலில் இவர் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தபோது, தவறான ரிசல்ட் கொடுத்தனர். மீண்டும் அவர் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தார். அப்போதுதான் தெரியவந்தது இது லாக்டு-இன்- சிண்ட்ரோம் என்பது.
லாக்டு-இன்-சிண்ட்ரோம்:
லாக்டு-இன்-சிண்ட்ரோம் என்பது கண்களில் உள்ள தசைகளைத் தவிர பிற தசைகள் அனைத்தையும் பாதித்து உடலை முழுவதுமாக முடக்கிப் போட்டுவிடும் ஒன்று. இந்த சிண்ட்ரோம் உள்ளவர்களால் கண்களை திறக்க முடியும் சுழற்ற முடியும். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடியும். மூளைத் தண்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த நிலை ஏற்படுகிறது.
அந்த அமெரிக்க நபர் அளவுக்கு அதிகமாக போதை பொருள் எடுத்துக்கொண்டதால், இந்த கோளாறு ஏற்பட்டது. அவரைச் சுற்றி இருந்த நபர்கள் என்னென்ன பேசினார்கள் என்பது அவருக்கு நினைவிருப்பதாக அவர் கூறினார். தான் ஏதோ ஒரு தனித்த அறையில் கைதி போல இருந்ததை உணர்ந்ததாக அவர் கூறினார். அவருடைய தேவைகளை பிறருக்கு சொல்ல முடியாத பெரிய வலியை அனுபவித்துள்ளார்.
மருத்துவர்கள் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டிருப்பதாக தவறாக நினைத்து, அவர் உயிரைக் காப்பாற்றும் கருவிகளை நீக்க முடிவு செய்தனர். ஆனால், அவருடைய மூளை நன்றாக செயல்பட்டதுதான் வந்ததாம்.
இதுகுறித்து அவர் பேசியதைப் பார்ப்போம். “எனக்கு முன்னாள் நேராக இருப்பதை மட்டுமே என்னால் கவனிக்க முடியும். என்னை மருத்துவ ஊழியர்கள் எப்படி படுக்க வைப்பார்களோ அந்த அடிப்படையிலேயே எனக்கு முன்னால் இருந்தவற்றை காண முடிந்தது. நாக்கு வறண்டுப்போனாலோ, பசித்தாலோ, அரித்தாலோ கூட என்னால் சொல்லமுடியாது.”என்றார்.
ஆனால், 2018ம் ஆண்டு இறுதியில்தான் படிபடியாக குணமுடைந்தார். இதனால், அவர் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக மாறினார். மேலும் இவர் Ahoi என்ற நிறுவனத்தில் கோ-ஃபவுண்டராகவும் இணைந்தார்.