வேட்புமனுவில் விவரங்களை மறைத்தாரா சுந்தர்.சி..? – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Sundar C
Sundar CSource:oneindiatamil
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வருமானத்தை மறைத்ததாக மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்.சி மீது வழக்கு தொடரப்பட்டது.

பங்குதாரராக உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவிஸ், அவ்னி சினிமாக்ஸ் பற்றிய நிறுவனங்களின் விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடாமல் சுந்தர்.சி அவர்கள் மறைத்துள்ளதாக வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வாக்காளர் ஷகிலா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் தகவல் மறைப்பு தொடர்பான புகார்களுக்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டனர்.இது சம்பந்தமாக விசாரணை நடத்தும் படியும் கோரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விசாரணைக்கு வருமான வரித்துறையை அணுக உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் இஸ் பேக் - குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி..!
Sundar C
logo
Kalki Online
kalkionline.com