

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி நியமன ஆணை வழங்க இருக்கிறார் தவெக கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான விஜய். இந்த நிகழ்வுக்காக இன்று கரூர் சென்று மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் முதலமைச்சர் விஜய் .அவரது வருகையையொட்டி 6,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்வில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்று நேரத்தில் நடைபெறும் கூட்டத்தில் அரசு பணி வழங்கும் நேரத்தில் வழக்கு விசாரணை துவங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போது கரூர் வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரித்து வருகிறது. இன்று மாலை பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் அரசுப்பணி வழங்கவில்லை , கும்பகோணம் மகாமகம் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி வழங்கவில்லை , தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் அரசு பணி வழங்கவில்லை..இப்படி பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்தது ஆனால் அப்போதெல்லாம் அரசு பணி அரசு பணி வழங்கவில்லை என மனுதாரர் கேள்வி எழுப்பினார்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பதில் கேள்வி எழுப்பியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது இழப்பீடு வழங்கியுள்ள நிலையில் அரசு பணி எதற்கு என்று மனுதாரர் பதில் அளித்தார்.
இதன் பின் பேசிய நீதிபதி கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கான விதிகள் பின்பற்றவில்லை எனவும் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று அரசு வேலை வழங்குவதில் தடை இல்லை, ஆனால் அந்த அரசு வேலை ஆணை தாற்காலிகமானதாகவே இருக்க வேண்டும்" என கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இன்று அரசு பணியாணை வழங்க தடை இல்லை என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தற்காலிகமாகவே பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் இன்று வழங்கப்படும் பணி நியமனம் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு .மேலும் கரூரில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவதற்கு எதிரான வழக்கில் டிஎன்பிஎஸ்சி TNPSC-ஐ எதிர் மனுதாரராக சேர்க்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மாலை பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது நிலையில் வழக்கு தொடரப்பட்ட , அரசு பணி வழங்குவதற்கு எதிரான இந்த வழக்கு வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே மனுதாரருக்கு கிடைத்த வெற்றி என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் கரூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டத்தில் செய்தி வழங்க காத்திருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை கரூர் மாவட்ட காவல்துறையினர் அவ்விடத்திலிருந்து அகற்றியது பரபரப்புக்கு உள்ளானது ஏற்கனவே கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாசலித்திருந்த நிலையில் செய்தியாளர்களை காவலர்கள் வெளியேற்றியதால் செய்தியாளர்கள் மறுப்பு தெரிவித்து வெளியில் இருக்கும் காவலர்களிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
செய்தியாளர்கள் அரங்கிற்கு வெளியே நிற்கவும் தற்போது அனுமதிக்கப்படாத தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக செய்தியாளர்கள் வெளியேற்றம் என கரூர் எஸ் பி கருத்து க்கு எங்களால் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்று அமைச்சர் ஆனந்த்-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.