பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு 20 ஆண்டுகளுக்கு பின் நீதி: உயர்நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு..!!

பாலியல் புகார் கொடுத்ததால் அதிகாரியால் பழிவாங்கப்பட்ட பெண் ஊழியருக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Court order
Court order
Published on

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சென்னையில் உள்ள ரெயில்வே ஊழியர் கூட்டுறவு சங்கத்தின் பெண் ஊழியர் ஒருவர் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், நிர்வாகம் அனைத்து நிலைகளிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்ததுள்ளது.

அதிகாரி மீது பாலியல் புகாரளித்ததால் பழிவாங்கப்பட்ட பெண் ஊழியருக்கு, 20 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பின் நீதி கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே தொழிலாளா்கள் கடன் சங்கத்தில் 1994-ல் பணியில் சேர்ந்தார். 1998-ம் ஆண்டு, அந்த சங்கத்தின் உதவிச் செயலாளராக பணியாற்றிய ஜே. நாககேசரி என்பவர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினார்.

ஆரம்பத்தில், அவரது அதிகாரத்தின் காரணமாக புகார் அளிக்க பயந்து, சங்கத் தலைவரிடம் வாய்மொழியாக புகார் அளித்தார். நாககேசரி மீது தற்காலிகமாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலும், பின்னர் அவை ரத்து செய்யப்பட்டு, அவருக்கு அனைத்து நிர்வாக அதிகாரங்களும் மீண்டும் வழங்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:
சிகிச்சைக்கான தொகையை தர மறுத்த காப்பீட்டு நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
Court order

தொடர்ச்சியான அவமானம் மற்றும் துன்புறுத்தலால் வருத்தமடைந்த அந்த பெண், தேசிய மகளிர் ஆணையம் (NCW), மாநில மகளிர் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம், மகளிா் ஆணையம், காவல்துறை, முதலமைச்சரின் பிரிவு மற்றும் ரெயில்வே பொது மேலாளரிடம் புகார்களை அளித்தார்.

அந்த பெண் அளித்த புகாா்களின் அடிப்படையில் 3 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திய நிலையில், விசாரணைக் குழுக்கள் அனைத்தும் சங்கத்துக்கு ஆதரவாகவும், பெண் பணியாளா் தரப்புக்கு போதுமான வாய்ப்பு அளிக்காமலும் விசாரணை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி 2003-ம் ஆண்டு ஜூன் 6-ம்தேதி ‘மெமோ’ கொடுக்கப்பட்டதுடன், 2004ம் ஆண்டு அந்த பெண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதனிடையே, தேசிய மகளிா் ஆணைய உறுப்பினராக இருந்த நிா்மலா சீதாராமன்(தற்போதைய மத்திய நிதியமைச்சர்), உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத் ஆகியோா் அடங்கிய குழு 22 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் முடிவில், விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ள வழிகாட்டுதல்கள் இந்த பெண்ணின் வழக்கில் பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானது.

மேலும் அந்த குழு நடத்திய விசாரணையில் நாககேசரியால் அந்தப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கண்டறிந்து, நாககேசரியை பணியில் இருந்து இடைநீக்கம் மற்றும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது.

அதன்படி, பணிக்கு சோ்க்கப்பட்ட அந்தப் பெண் கடந்த 2023-ம் ஆண்டு ஓய்வுபெற்றாா். ஆனால் அவா் மீதான துறை ரீதியான விசாரணை 2024-ம் ஆண்டில் இருந்து தொடா்ந்து நடந்து வருவதன் காரணமாக அந்தப் பெண்ணுக்கு தரவேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படவில்லை.

இதனை எதிா்த்து அந்தப் பெண் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அந்த பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டது உறுதியானதையடுத்து தனது பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது, பெண்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதி செய்வது நிா்வாகத்தின் கடமை. ஆனால், பணியிடத்தில் பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபா் மீது நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாககேசரி மீது போலீசார் பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தும், அவா் மீது சங்க நிா்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : மெரினாவில் இனி 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - நீதிமன்றம் அதிரடி..!
Court order

இந்த நிலையில், நாககேசரி மரணம் அடைந்துள்ளாா். பாலியல் தொல்லை தொடா்பாக புகாா் அளித்த மனுதாரா் மீதே குற்றம்சாட்டி, கடந்த 2003 மற்றும் 2004-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு மெமோக்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, எனவே, மனுதாரா் ஓய்வுபெற தகுதியானவா் என்பதால் மே 31, 2023 அன்று அந்த பெண் ஓய்வு பெற்ற தேதியிலிருந்து, அவரது அனைத்து ஓய்வூதியப் பலன்களும் அவா் ஓய்வுபெற்ற நாளில் இருந்து ஆண்டுக்கு 6% வட்டியுடன் வழங்க வேண்டும். இந்தத் தொகை எட்டு வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com