ஆசிரியர்கள் இதை செய்தே ஆக வேண்டும்: காலை உணவுத் திட்டத்தில் அரசு அதிரடி உத்தரவு!

மாணவர்களுக்கு முன் ஆசிரியர்கள் சாப்பிட வேண்டும்: காலை உணவு திட்டத்தில் அதிரடி உத்தரவு!
காலை உணவுத் திட்டம்
Kalai Unavu
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, காமராஜர் காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு மாணவர்கள் வரை விரிவாக்கம் செய்தது.

இந்நிலையில் காலை உணவின் தரத்தை உறுதி செய்ய, முதலில் ஆசிரியர்கள் உணவை சாப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மாணவர்களுக்கு ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டது.

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் 2023-ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஓடும் ரயிலில் சிக்கி நூலிழையில் தப்பிய முதியவர்: துரிதமாக செயல்பட்ட RPF Police! பதற வைக்கும் காட்சி!
காலை உணவுத் திட்டம்

தவெக அரசு பொறுப்பேற்ற உடன் இத்திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றியது. அதோடு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு கூடுதலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தரமான உணவை அளிக்க தமிழக அரசு முன்வந்தது.

இதன்படி கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்.

இந்தத் திட்டம் 7,537 அரசுப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 15 லட்சம் மாணவ, ம்ணவிகள் பயன் பெறுவார்கள். பள்ளி மாணவர்களின் உடல்நலன், ஊட்டச்சத்து, கற்றல் மற்றும் பள்ளி வருகை ஆகியவற்றை ஒருங்கிணைத்து பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு தரத்தை உறுதி செய்ய பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது

காலை உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டம்image credit-Polimer News
இதையும் படியுங்கள்:
​4 நாள் சரிவுக்கு ‘திடீர்’ பிரேக்! 5வது நாளில் எகிறிய தங்கம் விலை: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
காலை உணவுத் திட்டம்

பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில், “பள்ளிகளில் காலை உணவை ஆசிரியர்களே முதலில் ருசி பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் ருசித்துப் பார்த்து தரம் பார்த்த பிறகே, மாணவர்களுக்கு காலை உணவை வழங்க வேண்டும். மாணவர்களின் உடல் நல பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்பட்டு விடக்கூடாது.

மேலும் உணவை வீணாக்காமல் சாப்பிடவும் மாணவர்தளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். சுகாதார குறைபாட்டால் உணவு நஞ்சாதல் உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க வேண்டியது அவசியம். காலை உணவு திட்டத்தில் விபரீதங்களை தடுக்க வேண்டியது ஆசிரியர்களின் முக்கிய கடமை” என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் இந்த உத்தரவால், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு கிடைத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் சாம்பார் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com