#BREAKING: வந்தாச்சு மகளிர் உரிமை தொகை.! தமிழக முதல்வர் விஜய் அதிரடி.!

மகளிர் உரிமை தொகை
மகளிர் உரிமை தொகை
Updated on

கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, இந்த திட்டத்தின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மகளிர் உரிமைத் தொகையை வரவு வைத்த கால அவகாசம் வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று (மே 15) யாரும் எதிர்பார்க்காத வகையில் அனைத்து இல்லத்தரசிகளும் வங்கி கணக்கிலும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சட்டசபையில் விஜய் முதல்வராக தொடர்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதோடு மகளிர் உரிமைத்தொகை மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் உதவித்தொகைக்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் புதல்வன் மற்றும் மகளிர் உரிமைத் தொகையை திட்டங்களின் மூலம் உதவித்தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம் முதல் பெட்ரோல் விலை உயர்வு வரை: மத்திய அரசின் அதிரடி முடிவுகளும், பொதுமக்களின் தவிப்பும்.!
மகளிர் உரிமை தொகை

தேர்தலுக்கு முன்பாக மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2500 ஆக உயர்த்தப்படும் என விஜய் வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த வாக்குறுதி விஜய் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : விஜய் போட்டியே இல்லாத பிரதமர் ஆவார் - ஜோதிடர் ராதன் பண்டிட் அதிரடி கணிப்பு..!
மகளிர் உரிமை தொகை
logo
Kalki Online
kalkionline.com