#BIG NEWS : விஜய் போட்டியே இல்லாத பிரதமர் ஆவார் - ஜோதிடர் ராதன் பண்டிட் அதிரடி கணிப்பு..!

CM Vijay - Rathan Pandid
Vijay CM
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழக முதல்வர் விஜய்க்கு நெருக்கமான ஜோதிடர் ராதன் பண்டிட், விஜய் குறித்த முக்கிய தகவல்களை தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே ராதன் பண்டிட்டிற்கு அரசு பதவி தந்து கௌரவப்படுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் எதிர்ப்பால் இந்த முடிவை அடுத்த நாளே ரத்து செய்தார் முதல்வர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜயும் நானும் தந்தை மகன் போல என்று சற்றுமுன் ஜோதிடர் ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக கோவிலுக்கு சென்றால், அதை அரசியல் என்பார்கள் என விஜய் ராதன் பண்டிட்டிடம் தெரிவித்துள்ளார். ஆகையால் தான் தேர்தல் முடிந்த பிறகு, கடவுளுக்கு நன்றி சொல்ல விஜய் திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்களுக்கு சென்றதாக பண்டிட் தெரிவித்துள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதாவின் வெற்றியை முன்னரே கணித்ததாகவும்.. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியவராகவும் அவர் கூறினார். அதேபோல் தான் தற்போது நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலிலும் விஜய் சுனாமி போன்ற ஒரு வெற்றியை தருவார் என ராதன் பண்டிட் கணித்திருந்தார். அதேபோல் திராவிட கட்சிகளை வீழ்த்தி 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றது.

விஜயின் பிறந்த நாளான 1974 ஜூன் 22-ல், அவய் பிறந்த போது குறிப்பிட்ட 13 நிமிடத்தில் அவர் பிறந்தார். அந்த நேரம் என்பது, இனி வரலாற்றில் திரும்ப வராத ஒரு நேரமாகும். அப்படியான ஒரு நேரத்தில் பிறந்த விஜய் நிச்சயமாக எதிர்காலத்தில் நல்ல தலைவனாக வருவார் என்று நான் முன்பே கணித்தேன் என ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவும், விஜயும் ஜோதிடத்தை நம்பவில்லை. ஆனால் நான் சொல்வதை கேட்டுக் கொண்டார்கள்.

இதையும் படியுங்கள்:
மே 20-ல் வரப்போகும் பேராபத்து? மருந்து கடைகள் எடுத்த அதிரடி முடிவு.!
CM Vijay - Rathan Pandid

2027ல் எந்த அரசியல் தலைவருடைய வீழ்ச்சி தொடங்கும் என்ற கேள்விக்கு ராஜன் பண்டிட் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-ஐ கைகாட்டியுள்ளார். இபிஎஸ்-க்கு தலைமை தாங்குவதற்கான அனைத்து யோகங்கள் இருந்தாலும், உடனிருந்து ஆதரவு தருவதற்காக சரியான தலைவர்கள் இல்லை.

ஆனால் திமுகவில் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்காக உயிரை கொடுக்கக்கூடிய பல தலைவர்கள் உள்ளனர். அதனால்தான் திமுக இன்றும் வலுவாக இருக்கிறது.

முருகன் என்று ஒருவர் இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தால் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் அவர் நேரடியாக வந்து தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் முருகன் மீதான நம்பிக்கை அளப்பரியது. அந்த நம்பிக்கை தான் நம்முடைய முயற்சிகளை வெற்றியாக மாற்றித் தருகிறது என ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
நேரம் குறையுது.. கட்டுப்பாடு ஏறுது.! இனி ஆதார் கார்டு இருந்தா தான் 'சரக்கு'.!
CM Vijay - Rathan Pandid

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித்தை சந்திக்க நான் முயற்சி செய்தேன். விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் முதல்வராவதற்கான யோகம் இருந்தது. முதல்வர் விஜயை நான் தேவ தூதனாகவே கருதுகிறேன். முதல்வர் விஜய்க்கு பிரதமர் ஆகும் யோகமும் தற்போது உள்ளது.

உங்களுக்கு அரசு பதவி கொடுத்தார்கள் அதை பற்றி கேள்வி எழும் போது, என் மீது உள்ளவர் அன்பின் வெளிப்பாடு நாள் தான் அவர் எனக்கு இந்த பதவியை கொடுத்தார் என்றும் விஜய்க்கு துளி அளவு கூட ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

 விஜய் சார் போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு. 100 வருடம் கடந்து வாழ்வார். மோடிக்கு இருக்கும் யோகத்தில் கால்வாசிதான் ராகுலுக்கு இருக்கிறது. வரும் 2029ல் மோடிக்கு ராகுதசை ராகுபுத்தி. அவர் பிரதமர் ஆவது கடினம். மூன்றாம் அணி ஒன்று நிச்சயம் உருவாகும். விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார். முதல்வர் விஜய்க்கு பிரதமர் ஆகும் அளவுக்கு யோகம் இருக்கிறது. PM மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது CM விஜய்யின் ஜாதகம். இன்னும் 30 - 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார் என்றார்.

logo
Kalki Online
kalkionline.com