தமிழக இல்லத்தரசிகளுக்கு செம அறிவிப்பு..! இனி வருஷத்துக்கு கால் லட்சம் மகளிர் உரிமை தொகை கிடைக்குமாம்..!

Magalir Urimai Thogai
MK stalin, Magalir Urimai Thogai
Updated on

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகளின் அடிப்படை வருமான ஆதாரத்திற்கு உதவும் வகையில், தற்போதைய அரசு தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் உதவியாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரத்தில் 1.31 கோடி பெண்களுக்கு 3 மாதத்துக்கான உரிமைத் தொகையுடன் கோடை சிறப்பு தொகை சேர்ந்து ரூ.5,000 ஒரே தவணையாக வழங்கப்பட்டது.தேர்தல் காரணமாக முன்கூட்டியே இந்த தொகை வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது பெண்களுக்கு ரூபாய் 5000 தொகையை ஒரே முறை தவணையாக அரசு வழங்கியதை குற்றம் சாட்டியும் முந்தைய நான்கு ஆண்டுகளில் கோடை காலம் வரவில்லையா என்றும் கேட்டது பரபரப்பை கிளப்பியது.

இது குறித்து, சட்டமன்றத்தில் பேசிய சமூக நல மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தற்போது வழங்கப்பட்டுள்ள 'கோடைக்கால சிறப்பு நிதி' இனி வரும் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகைக்குக் கூடுதலாக, ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு நிதியாக அமையும்.

தேர்தல் நெருங்கி வரும் வேலையில் மட்டும் பெண்களை கவரும் வகையில் ஓட்டுக்காக இது போன்ற சலுகைகளை அரசு அறிவித்து வருவது ஒரு பக்கம் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் மீண்டும் ஆட்சி தொடர்ந்தால் இதேபோன்று வழங்கப்படுமா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது .

இது உண்மை என்றால் இனி தமிழகத்தில் வசிக்கும் பெண்களுக்கு வருடத்திற்கு கால் லட்சம் அதாவது 25 ஆயிரம் ரூபாய் இலவசமாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . ஏனெனில் தேர்தல் வாக்குறுதியாக இனி மாதம் தோறும் ரூ 1000 த்திலிருந்து 2000 ரூபாய் உயர்த்திய அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால் பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களே உஷார்..! இவர்களுக்கெல்லாம் இனி மேல் உரிமைத்தொகை கிடைக்காது..!
Magalir Urimai Thogai

கணக்கீடு:

  • மாதந்திர உரிமைத் தொகை: ரூ.2,000 × 12 மாதங்கள் = ரூ.24,000

  • கோடைக்கால சிறப்பு நிதி: ரூ.2,000

  • மொத்த ஆண்டு வருமானம்: ரூ.26,000 (சுமார் கால் லட்சம் ரூபாய்)

விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு வாய்ப்பு:

இந்தத் திட்டம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் என்பதால், இதுவரை தகுதியிருந்தும் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் 'மீளாய்வு' (Appeal) செய்ய வாய்ப்பு உள்ளது. இதைப் பற்றி விபரங்கள் தெரியாத மற்ற பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உதவலாம் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆதார் கார்டு இருந்தா போதும்! பிணையின்றி ரூ.50,000 வரை கடன் வழங்கும் 'PM SVANidhi' திட்டம்.!!
Magalir Urimai Thogai

அதிகாரப்பூர்வ தகவல் கைட் உங்களுக்காக

1. திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தளம் (Status & Guidelines)

திட்டத்தின் முழு விவரங்கள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை மற்றும் புதிய வழிகாட்டுதல்களை அறிய இந்தத் தளத்தைப் பார்க்கவும்.

  • இணையதளம்: https://kmut.tn.gov.in

  • பயன்: உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை அறியலாம்.

2. விண்ணப்ப நிலை அறிய (Application Status)

உங்களின் ஸ்மார்ட் ரேஷன் கார்டு (Smart Ration Card) அல்லது விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

3. புகார்கள் மற்றும் உதவிக்கு (Helpline & Grievances)

விண்ணப்பம் தொடர்பான சிக்கல்கள் அல்லது பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டால் இங்கே புகார் அளிக்கலாம்.

  • முதலமைச்சரின் உதவி மையம்: https://cmhelpline.tnega.org/portal

  • பயன்: உங்கள் புகார்களைப் பதிவு செய்து அதற்கான தீர்வைக் கண்காணிக்கலாம்.

4. பொதுவான அரசு அறிவிப்புகள் (General Info)

தமிழக அரசின் அனைத்துத் துறைச் சார்ந்த புதிய அறிவிப்புகள் மற்றும் அரசாணைகளை அறிய:

logo
Kalki Online
kalkionline.com