'மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்' - 'இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், ரயில் பெட்டிகள், என்ஜின்களின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்திய ரயில்வே வேகமாக வளர்ந்து வருகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , இந்தியாவில் ரயில் சக்கர வண்டிகளுக்கான முக்கிய உற்பத்தி மையமான குஜராத்தின் வதோதராவில் உள்ள அல்ஸ்டோம் நிறுவனத்தின் சவ்லி யூனிட்டை (Savli Unit) பார்வையிட்டார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ பெட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போகீகள் யுனைட்டெட் கிங்டம்மிற்கு, சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உந்துவிசை அமைப்புகளை (எஞ்சின்கள்) பிரான்ஸ், மெக்சிகோ, ரோமேனியா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கு வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் மொசாம்பிக், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வைஷ்ணவ் கூறுகையில், "பல்வேறு நாடுகளுக்கு ரயில் உபகரணங்களை ஏற்றுமதி செய்வது இந்தியாவில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது" என்றார். அவர் மேலும், "இந்தியப் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இப்போது சர்வதேச தரங்களில் நிபுணத்துவம் பெற்று வருகின்றனர். இது 'இந்தியாவில் தயாரிப்போம்' மிஷனின் முக்கிய வெற்றி" என்று விவரித்தார்.
சவ்லி யூனிட், அரசின் 'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' முன்முயற்சிகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன், மிகவும் நவீனமான நகர்ப்புற போக்குவரத்து ரயில் மற்றும் ட்ரான்ஸிட் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து வருகிறது.
அனைத்து பி.யு.க்களின் ஜெனரல் மேனேஜர்கள், அல்ஸ்டோமின் சவ்லி யூனிட்டுக்கு பயிற்சி மற்றும் 'அனுபவப் பயணங்களை' மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
2016 முதல், இந்தியா பல்வேறு சர்வதேச திட்டங்களுக்காக 1,002 ரயில் கார்களை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து, நவீன ரயில் அமைப்புகளின் நம்பகமான விநியோகியாக நாட்டின் நிலையை வலுப்படுத்தியுள்ளது.
குயின்ஸ்லாந்து மெட்ரோ திட்டத்திற்காக 450 ரயில் கார்கள் சவ்லியில் தயாரிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சவ்லி யூனிட்டு ஜெர்மனி, எகிப்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு 3,800க்கும் மேற்பட்ட பொகீகளை (bogies) வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் 4,000க்கும் மேற்பட்ட ஃப்ளாட்பேக்குகள் (flatpacks) ஆஸ்திரியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. மேனஜா யூனிட்டு பல்வேறு உலகளாவிய திட்டங்களுக்கு 5,000க்கும் மேற்பட்ட உந்துவிசை அமைப்புகளை (எஞ்சின்கள்) ஏற்றுமதி செய்வதன் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்தியா தற்போது 27 சர்வதேச சிக்னலிங் திட்டங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. அடுத்த தலைமுறை சிக்னலிங்கை கவனத்தில் கொண்டு உலகளாவிய ரீதியில் 120க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
மீடியாவிடம் பேசுகையில், யூனியன் அமைச்சர், "இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் உலகிற்காக தயாரிப்போம்" என்று கூறினார். இந்த முயற்சிகளின் தாக்கம் இந்திய ரயில்வே உற்பத்தி துறையில் தெளிவாகவேத் தெரிகிறது.