மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முகமது முய்சு கட்சி அமோக வெற்றி!

Mohammed Muizzu
Mohammed Muizzu

நேற்று மாலத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு என அமோகமாக வெற்றிபெற்றது.

மாலத்தீவின் 20 வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று மாலத்தீவு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதிபர் முகமது முய்சுவின் செயல்பாடுகள் இந்தியாவுக்கும், மாலத்தீவுக்குமான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தத் தேர்தலில் மாலத்தீவு மக்களிடையே முய்சுவின் செல்வாக்கைக் கணிக்க இந்தியாவுக்கும், மாலத்தீவு எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மாலத்தீவின் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், உடனே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையில் 66 இடங்களில் முய்சுவின் PNC கட்சி அபாரமாக வென்றது. 93 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 66 PNC கட்சி உறுப்பினர்கள் வென்றுள்ளனர்.

இதற்கு முன்னர், PNC கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்தே 8 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். அதனால், அப்போது அவரால் விரும்பிய சட்டங்களை உடனே நிறைவேற்ற முடியவில்லை. இதனையடுத்து, நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முய்சு கட்சி வெற்றிபெற்றதால், முய்சுவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதனால், முய்சுவிற்கு இனி சட்டங்கள் நிறைவேற்றுவதில், பெரிய தடைகள் எதுவும் இல்லை.

முய்சு இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு  பிரச்சாரம் செய்யும்போதே ‘இந்தியா அவுட்’ என்று  சொல்லித்தான் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னர் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை உடனே வெளியேறும்படி கூறினார். மேலும், பதவியேற்றவுடனே சீனாவின் உறவை வலுப்படுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
PBKS Vs GT: மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி… !
Mohammed Muizzu

ஆகையால், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முய்சு கட்சி வெற்றிபெற்றதையடுத்து, சீனாவுடனான உறவை மேம்படுத்த அவர் போடும் திட்டத்திற்கும், சட்டங்களுக்கும் உள்ளூரில் ஆதரவு பெருகும். அதேபோல், இந்தியாவுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வர எதிர்ப்புகள் குறையவும் வாய்ப்புள்ளது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அதிகளவு சுற்றுலா வருமானத்தை நம்பியிருக்கும் மாலத்தீவு, தனது அண்டை நாடான இந்தியாவைப் பகைத்துக்கொண்டதால், சுற்றுலா வருமானம் குறைந்துள்ளது. இதற்கு மாலத்தீவின் சுற்றுலா அமைப்பு, இந்திய தூதரகத்தில் உதவி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com