கனடா பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட மார்க் கார்னி - 3 இலங்கை தமிழர்கள் வெற்றி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இலங்கை தமிழர்களான அனிதா ஆனந்த், ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 3 பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
மார்க் கார்னி
மார்க் கார்னி
Published on

கனடாவில் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே மத்திய வங்கியின் தலைவரும், அந்த கட்சியைச் சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் வரை இருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக அவர் அறிவித்தார்.

இதனையடுத்து 343 தொகுதிகள் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஆளும் லிபரல் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி மீண்டும் களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் சார்பில் பெர்ரி பொய்லிவ் அவரை எதிர்த்து போட்டியிட்டார்.

தேர்தல் முடிந்தநிலையில் 43.4 சதவீதம் வெற்றி பெற்று மார்க் கார்னி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 4-வது முறையாக லிபரல் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவு பெற்ற புதிய ஜனநாயக கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பல மாதங்களாக நீடித்த அரசியல் நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு ஆட்சி செய்வதற்கான ஆணையைப் பெற்றுள்ளார்.

அதேசமயம் இலங்கை தமிழர்களான அனிதா ஆனந்த், ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 3 பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஹரி ஆனந்த சங்கரியும் ஒருவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் நியமிக்கப்பட்ட முதல் தமிழ்-கனடியரானதன் மூலம் வரலாற்றை உருவாக்கினார்.

இதையும் படியுங்கள்:
இன்று கனடா நாட்டின் பொது தேர்தல்... கனடாவின் எதிர்காலம்??
மார்க் கார்னி

அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஹரி ஆனந்த சங்கரி ஒரு வழக்கறிஞராகவும், சமூக வழக்கறிஞராகவும் இருந்து, கனடிய தமிழர் வர்த்தக சபை, கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் கனடிய தமிழ் இளைஞர் மேம்பாட்டு மையம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலிலும் அவர் ஒரு பரிச்சயமான குரலாக இருந்தார், அங்கு அவர் இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது குறித்து அடிக்கடி பேசினார் மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக, மே 18-ம் தேதியை தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக கனடா அங்கீகரிப்பதில் ஹரி ஆனந்த சங்கரி முக்கிய பங்கு வகித்தார். தமிழர் பிரச்சினைகளில் தனது பணிக்கு கூடுதலாக, கனடாவிற்குள் பழங்குடி உரிமைகளுக்கான ஒரு முக்கிய வக்கீலாக ஹரி ஆனந்த சங்கரி இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
கனடா பிரதமர் முன்பு காலிஸ்தான் ஆதரவு கோஷம்… இந்தியா கண்டனம்!
மார்க் கார்னி

அரச-பூர்வீக உறவுகள் அமைச்சராக, நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுக்கவும், வரலாற்று அநீதிகளை நிவர்த்தி செய்யவும், பழங்குடி நில உரிமைகளை மேம்படுத்தவும் அவர் பணியாற்றினார்.

இதற்கிடையே கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணம் என கருதிய ஜனாதிபதி டிரம்ப் அதனை தன்னுடன் இணைக்க போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதனை தனக்கு சவாலாக எடுத்துக்கொண்ட மார்க் கார்னி இதற்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதுவே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது பேசிய கார்னி, "அமெரிக்காவுடனான ஒருங்கிணைப்பின் பழைய உறவு இப்போது முடிந்துவிட்டது" என்றும் "அமெரிக்க துரோகத்தின் அதிர்ச்சியிலிருந்து நாம் மீண்டுவிட்டோம்" என்றும் கார்னி கூறினார்.

"கனடாவை வீடு என்று அழைக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த நான் எப்போதும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்," என்று கார்னி கூறினார்.

ஒன்டாரியோவின் கார்ல்டனில் எதிர்பாராத விதமாக தனது சொந்த இடத்தை இழந்த கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை கார்னி தோற்கடித்தார்.

பல தசாப்தங்களில் நாட்டின் மிகவும் முக்கியமான தேர்தல்களில் ஒன்றான இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கனடா செய்தி நிறுவனம் 'சிபிசி' அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இந்தியா - கனடா உறவுகள் முறிந்தது! கடுமையான பதிலடி கொடுத்த இந்தியா!
மார்க் கார்னி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com