#JUST IN: நேற்று ஏறிய தங்கம் விலை இன்று அதிரடி சரிவு.!

Gold price
Gold Price
Updated on

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் தான் இருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.

இந்த வாரத்தில் முதல் 3 நாட்கள் தங்கத்தின் விலை சரிவை நோக்கியே சென்றது. ஆனால் நேற்று காலை மாற்றமின்றி விற்பனையான தங்கம், மாலையில் ஒரு கிராம் ரூ.200-ம், ஒரு சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. தங்கம் மட்டுமின்றி, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.270-க்கு விற்பனையானது.

நேற்றைய (ஏப்ரல் 30) நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800-க்கும் விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாதத்தின் தொடக்க நாளான இன்று (மே 1) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது.

ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,050-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே... ஏமாற வேண்டாம்! நீட் தேர்வுக்கு முன் பரவும் அந்த 'வினாத்தாள்'.. உண்மை என்ன?
Gold price

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறலந்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 2 நாட்களாக ரூ.2,650 வரை குறைந்த தங்கத்தின் விலை நேற்று மாலை திடீரென ரூ.1,600 உயர்ந்தது. இந்நிலையில் மாதத்தின் தொடக்க நாளான இன்று ரூ.400 குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலையை மிஞ்சும் இளைஞர்களின் மன அழுத்தம்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
Gold price
logo
Kalki Online
kalkionline.com