விவசாயிகளுக்கு குட் நியூஸ்: மேட்டூர் அணை திறக்கும் தேதியை அறிவித்தது தமிழக அரசு!

2 மாத தாமதத்திற்குப் பின் டெல்டா பாசனத்திற்குப் பாயப் போகிறது மேட்டூர் அணை நீர்.
மேட்டூர் அணை
Mettur Dam
Updated on

ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்ததைக் காரணம் காட்டி, ஜூன் 12-ல் அணை திறக்கப்படவில்லை.

இதனால் குறுவை சாகுபடி கடந்த இண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கர்கள் குறைந்தது. மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் இருந்து தண்ணீரும் திறக்கப்படாத சூழலில் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.

இந்நிலையில் நேற்று சட்டசபையில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பிய போது, விரைவில் நல்ல செய்தி வரும் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப தமிழக அரசு மேட்டூர் அணையைத் திறக்கும் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி வருகின்ற ஆகஸ்ட் 28-ம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று திறந்து வைக்க இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளே..! பருவமழையில் இருந்து பயிர்களை காப்பாற்றும் ரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்..!
மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி ஆகும். இதில் கடந்த மே மாத இறுதி நிலவரப்படி, 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது. பாதிக்கும் குறைவான கொள்ளளவே இருந்ததால், மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறப்பது சாத்தியமில்லை எனக் கூறப்பட்டது.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறப்பது, விவசாயிகளின் உழவுப் பணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாழந்த நிகழ்வாகும். மேட்டூர் அணையை திறந்த பிறகு டெல்டா மாவட்டங்களுக்கு அந்த நீர் சென்றடைய கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை ஆகும். அப்படி மேட்டூர் அணையின் டெல்டா மாவட்டங்களில் அடையும்போது விவசாயிகள் மலர் தூவி வரவேற்பது வழக்கம்.

இருப்பினும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடிகள் இருந்தால் மட்டுமே அணையை திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இம்முறை அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் குறைவாக இருந்ததால் தான், குறித்த நேரத்தில் அணையைத் திறக்க முடியாமல் போனது.

கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 90 அடிகளை நெருங்கி வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை மறுதினம் (ஆகஸ்ட் 28) மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நேரில் சென்று திறக்கவுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய், முதன்முறையாக மேட்டூர் அணையைத் திறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

mettur dam
mettur damsource : etvbharat
இதையும் படியுங்கள்:
அப்படி போடு... வைக்கோலில் மின்சாரம் தயாரிப்பு: விவசாயிகளின் கூடுதல் வருமானத்திற்கு வழிகாட்டும் தனியார் நிறுவனம்..!
மேட்டூர் அணை

நடப்பாண்டில் பருவமழை காலதாமதமாக தொடங்கும் எனவும், மழையளவு குறைவாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் கர்நாடகத்தில் இருந்து வர வேண்டிய உபரி நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆண்டுதோறும் ஜூன் 12ல் திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், கடை மடைக்குச் சென்றடைய சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும். இதனை வைத்தே விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்குவர். இந்த சாகுபடி செப்டம்பர் மாதத்தில் அறுவடைக்கு வரும். குறுவை சாகுபடி முடிந்ததும், சம்பா அறுவடைக்கு விவசாயிகள் விவசாயிகள் தயாராகி விடுவார்கள்.

ஆனால் இம்முறை மேட்டூர் அணை ஆகஸ்ட் மாத இறுதியில் தான் திறக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கால தாமதமாக மேட்டூர் அணைத் திறக்கப்பட இருப்பதால், இந்த நீரை விவசாயிகள் சம்பா சாகுபடிக்குத் தான் பயன்படுத்துவார்கள் எனத் தெரிகிறது

logo
Kalki Online
kalkionline.com