#BREAKING: மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்..!!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 93-வது முறையாகத் தண்ணீரை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
CM Vijay to open Mettur Dam gates
CM Vijay to open Mettur Dam gatesimage credit-indianexpress.com, @Vignesh_twitz
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 93-வது முறையாகத் தண்ணீரை முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த நிகழ்விற்காக பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்த முதலமைச்சர் விஜய்க்கு ‘பொன்னி நதியின் புதல்வன்’ என்ற பட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சாக விளங்கும் மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 17.10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேலாகவும், அணைக்கு நீர்வரத்து போதிய அளவு இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ம்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 93 ஆண்டுகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உரிய நாளில் 20 முறையும், அணையின் நீர்மட்டம் அதிகமாக இருந்தபோது உரிய தேதிக்கு முன்பாகவே 11 முறையும், போதிய தண்ணீர் இல்லாததால் 61 முறையும் காலதாமதமாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், அதாவது அணையின் நீர்மட்டம் 79.56 அடியாகவும், நீர்வரத்து 540 கனஅடியாகவும் மட்டுமே இருந்ததால், நடப்பாண்டு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு முன்பு 2011 முதல் 2019 வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகளுக்கு காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கடந்த 4-ம்தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்டம்பர் 1-ந்தேதி ) தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணைsource : etvbharat

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களை தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை சாலையில் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

அதனை தொடர்ந்து நண்பகல் சுமார் 11.40 மணி அளவில் முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகு மின்விசை மூலம் இயக்கப்பட்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

இதையும் படியுங்கள்:
காவிரி டெல்டா மாவட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
CM Vijay to open Mettur Dam gates

இந்த நிகழ்விற்காக பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்த முதலமைச்சர் விஜய்க்கு ‘பொன்னி நதியின் புதல்வன்’ என்ற பட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வினாடிக்கு 5,000 கன அடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக வினாடிக்கு 12,000 கன அடி வரை அதிகரிப்பட வாய்ப்பு. மேலும் இன்று (1-ம் தேதி) முதல் 45 நாட்​களுக்கு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்​டூர் அணை​யின் 93 ஆண்டு கால வரலாற்​றில், கால​தாமத​மாக 62-வது முறை​யாக இன்று பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைக்​கப்​பட்டுள்ளது.

தொடர்ந்து அணையில் நீர்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அணை குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து, மேட்டூர் அணை மின் நிலையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

இந்த நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்!
CM Vijay to open Mettur Dam gates

இந்நிலையில், டெல்டா விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று (செப்., 1) முதலமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். தண்ணீரில் மலர்களை தூவி விவசாயிகளுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

logo
Kalki Online
kalkionline.com