சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.
வளர்ப்பு நாய்களை சிலர் சரியாக பராமரிக்க முடியாமல் சாலையில் விட்டு விடுகிறார்கள். இப்படி செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு விரைவில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும், மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள் அதற்கென உருவாக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.நாய்களுக்கு தடுப்பூசி போட வரும்போது மைக்ரோ சிப் பொருத்தப்படவில்லையெனில், முதலில் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்.
சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* பிட்புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாயினங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தங்கள் நாய்களை வெளியே அழைத்துச் செல்லும்போது கட்டாயமாக வாய்மூடி அணிவிக்க வேண்டும்.
*வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும்.
*உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.3 ஆயிரம் அபராதம்
* "வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும்"
* வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே முழுப் பொறுப்பு.
நாய்களுக்கு தடுப்பூசி போட வரும்போது மைக்ரோ சிப் பொருத்தப்படவில்லையெனில், முதலில் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்.அதையும் மீறி மைக்ரோ சிப் பொருத்தவில்லை என்றால், நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும்.மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள், அதற்கென உருவாக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.