தெரு நாய்களுக்கு உணவளிக்க கூடாது..! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு..!

"தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்" - சட்டப்பேரவையில் அமைச்சர் அருண் ராஜ் பேச்சுக்கு எதிர்ப்பு!
Woman feeds stray dogs on Adyar street
படம் சித்தரிப்பு : A woman feeding stray dogs on a quiet street in Adyar, Chennai.
Updated on

“நாங்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்று சொல்லி பொதுமக்கள் தெரு நாய்களுக்கு உணவு, பிஸ்கட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறியது தற்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

அமைச்சர் அருண் ராஜ், நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொடர்பான விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பதிலளித்தபோது, பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு, பிஸ்கட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெருக்களில் நாய்களுக்கு உணவளிப்பது அவற்றின் எண்ணிக்கைப் பெருக வழிவகுக்கிறது.தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் அமைச்சர் அதே விவாதத்தில் நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் தயாராக உள்ளதாகவும் அரசு மருத்துவமனைகள் மேற் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் போதுமான அளவில் இருப்பு உள்ளதாகதாகவும் நோய் பாதித்த நாய்களை கட்டுப்படுத்த, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் ஜூன் 2026-ல் திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டதாக பதிவுகள் உள்ளன. அப்போது 2024 கணக்கெடுப்பின்படி திருச்சியில் மட்டுமே சுமார் 43,000 தெருநாய்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கணக்கு ஒரு மாவட்டம் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாய்களுக்கு உணவு கொடுத்தால் அவை ஆக்ரோஷமாகிவிடும் என்பதாலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தினால் நாய்க்கடி சம்பவங்களும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற நோக்கத்தில் அமைச்சர் இது போன்ற கருத்தை குறிப்பிட்டாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

எனினும் வாயில்லா ஜீவன்கள் மீது அன்பு கொண்டவர்களுக்கு இவரது கருத்தில் உடன்பாடின்றி பல்வேறு விதமான கருத்து மோதல்களை சமூக வலைதளங்களில் விதைத்து உள்ளது.

தெருக்களில் வாழும் அவைகள் உணவிற்கு எங்கே செல்லும்? முன்பெல்லாம் நாய்கள் திறந்த வெளிக் குப்பை தொட்டியில் நாம் போடும் மீதமான உணவுகளை சாப்பிட்டு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும். ஆனால் இப்போதுள்ள நவீன குப்பை தொட்டிகளில் அவைகளால் உள்ளே சென்று உணவு தேடமுடியவில்லை. அவற்றிற்க்கும் இவ்வுலகில் வாழ்வதற்கு உரிமை உள்ளது. அவைகள் பசி போக்கும் கடமையூம் கருணையும் மனிதர்களான நம்மிடமே உள்ளது.

அவைகளுக்கு உணவு அளிக்க வில்லை என்றால் தான் பசி வேகத்தில் ஆக்ரோஷம் அதிகமாகி மனிதர்கள் மீது பாயும். அரசுதான் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதை விடுத்து அன்பு செலுத்தும் மக்களையும் தடுத்தால் அதனால் வரும் பின்விளைவுகள் நிறைய.

எனவே அமைச்சரின் இந்தக் கருத்து முறையானதல்ல என்று அரசாங்கம் தான் அவைகளுக்கு முறையான கருத்தடை மற்றும் உணவு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்குகளின் நலம் விரும்பிகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

“உணவு கொடுப்பதால் நாய்கள் குறிப்பிட்ட இடத்தில் திரளுகின்றன → பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் நாய்க்கடி ஏற்படுகிறது” என்ற காரணத்தை வைத்து அமைச்சர் தனது கருத்தை கூறியிருக்கலாம் என்ற கருத்தும் நாய்களை வெறுப்பவர்களிடம் இருக்கும் அமைச்சர் பேச்சுக்கு ஆதரவாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தெரு நாய்களிடம் எச்சரிக்கையாக இருப்பதற்குப் பல வழிமுறைகள் வலியுறுத்தப்படுகின்றன. அதில் முக்கியமானது, நாயைத் திடீரெனச் சத்தமெழுப்பி பயமுறுத்தாமல், ஓடாமல், அதன் தனிப்பட்ட இடத்தை மதிப்பது ஆகும்.

 caught by stray dogs
caught by stray dogsAI Image

தெரு நாய்களிடம் தேவையான முன்னெச்சரிக்கைகள்:

  • ஓடாதீர்கள்: ஓடுவது நாயின் துரத்தும் உணர்வை தூண்டலாம் என்பதால், நாய் அருகில் வரும்போது பயந்து போய் வேகமாக ஓடாதீர்கள். நாய் துரத்துவது போல் தெரிந்தால் மெதுவாகப் பின்னால் நகருங்கள்.

  • அமைதியாக இருங்கள்: நாயின் கவனத்தை கவர்வது போல நேராக உற்றுப் பார்க்காமல், உடலைச் சற்று பக்கவாட்டில் திருப்பி அமைதியாக இருங்கள். குறிப்பாகக் கைகளை அசைத்துக் கத்துவதோ, கல்லெறிவதோ வேண்டாம்.

  • சைக்கிளில் செல்லும்போது: சைக்கிளில் சென்றால், நாய் துரத்தும்போது வேகமாக ஓட்டுவதற்கு பதிலாக இறங்கி, சைக்கிளை உங்களுக்கும் நாய்க்கும் இடையில் தடுப்பாக வைத்துக்கொள்ளலாம்.

  • சத்தம் எழுப்பாதீர்கள்: நாய் குரைத்தால் அல்லது ஆக்ரோஷமாக வந்தால் அமைதியான குரலில் “போ… போ…” என்று சொல்லலாம்.

  • தூண்டும் செயல்களைத் தவிர்க்கவும்: நாயின் குட்டிகள், உணவு அல்லது அது தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் செல்லாதீர்கள். தூங்கும் அல்லது சாப்பிடும் நாயைத் தொட முயற்சிக்காதீர்கள். முக்கியமாகக் குழந்தைகளைத் தனியாகத் தெருநாய்களிடம் செல்ல விடாதீர்கள்.

  • தாக்க முயன்றால்: துரதிருஷ்டவசமாக நாய் கடிக்க முயன்றால், உடனடியாக ஓடாமல் கையிலிருக்கும் பை/குடை போன்ற பொருளை உங்களுக்கும் நாய்க்கும் இடையில் தடுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். கீழே விழுந்துவிட்டால், உடலைச் சுருட்டி, முகம் மற்றும் கழுத்தைக் கைகளால் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

  • கடித்தால் செய்ய வேண்டியவை: மீறி கடித்தால் அல்லது கீறினால் அலட்சியமாக இருக்காமல், காயத்தை உடனடியாக சோப்பு மற்றும் ஓடும் தண்ணீரில் சுமார் 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவுங்கள். பின்னர் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, ரேபிஸ் தடுப்பு சிகிச்சை தேவையா என்பதை ஆலோசியுங்கள். நாய் தடுப்பூசி போட்டது போல தெரிந்தாலும் மருத்துவ ஆலோசனையைத் தவிர்க்க கூடாது.

ரேபிஸ் அறிகுறிகள் தோன்றிய பிறகு நோய் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையை எட்டும். எனவே, நாய் கடித்தவுடன் சிகிச்சை பெறுவதுதான் பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
புகைப்பிடித்தலுக்கு வாழ்நாள் தடை!
Woman feeds stray dogs on Adyar street
இதையும் படியுங்கள்:
#BREAKING : பரந்தூரில் நீர்நிலைகளை அழித்தால் சென்னைக்கு வெள்ள ஆபத்து: அமைச்சர் கீர்த்தனா..!!
Woman feeds stray dogs on Adyar street
logo
Kalki Online
kalkionline.com