தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 20 நாட்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்..! உத்தேச பயணத் திட்டம் வெளியீடு!

M. K. Stalin
M. K. Stalin
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது என்று இலக்கு நிர்ணயித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதற்காக 22 கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் தோறும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார். அவர் ஏப்ரல் 2-ந்தேதி திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.திருவாரூரில் பிரச்சாரத்தை துவங்கி தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் முதலமைச்சர்.

திமுகவின் தேர்தல் அறிக்கையும் வரும் ஏப்.2ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்ட நிலையில், திமுகவின் அறிவிப்பில் என்னென்ன இடம்பெற போகிறது என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம், சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

02.04.2006 - திருவாரூர்

03.04.2026 - ஜெயங்கொண்டம் (காலை)

திருவெறும்பூர் (மாலை)

04.04.2026 - கரூர் (காலை)

திருப்பூர் (மாலை)

05.04.2026 - நாகர்கோவில்(காலை)

திருநெல்வேலி(மாலை)

06.04.2026 - வேட்புமனு தாக்கல்(காலை)

திருவள்ளூர்(மாலை)

07.04.2026 - மேட்டுப்பாளையம் (காலை)

குலூர்(மாலை)

08.04.2026 - பரமத்தி வேலூர்(காலை)

ஈரோடு(மாலை)

09.04.2026 - தருமபுரி(காலை)

கிருஷ்ணகிரி (மாலை)

10.04.2026 - வேலூர் (காலை)

ஆரணி (மாலை)

11.04.2026 - சிவகங்கை (காலை)

மதுரை (மாலை)

12.04.2026 - விருதுநகர் (காலை)

சங்கரன்கோவில் (மாலை)

13.04.2026 - தஞ்சாவூர் (காலை)

மயிலாடுதுறை (மாலை)

14.04.2026 - நெய்வேலி (காலை)

விழுப்புரம் (மாலை)

15.04.2026 - அணைக்கட்டு (காலை)

ராணிப்பேட்டை (மாலை)

16.04.2026 - கள்ளக்குறிச்சி (காலை)

சேலம் (மாலை)

17.04.2026 - ஆண்டிபட்டி (காலை)

திண்டுக்கல் (மாலை)

18.04.2026 - ராமநாதபுரம் (காலை)

விளாத்திகுளம் (மாலை)

19.04.2026 - செங்கல்பட்டு

20.04.2026 - பெரம்பலூர்

21.04.2026 - ஸ்ரீபெரும்புதூர் (காலை)

கொளத்தூர் (மாலை)

இதையும் படியுங்கள்:
தவெக விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்..!!
M. K. Stalin

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com