‘மோடிக்கும் அதிகார ஆசை இருக்கிறது’ அண்ணா ஹசாரே அட்டாக்!

‘Modi has lust for power’ Anna Hazare Attack!
‘Modi has lust for power’ Anna Hazare Attack!https://globalearthrepairfoundation.org
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ழலுக்கு எதிராக 2014ம் ஆண்டில் இயக்கம் ஆரம்பித்து, டெல்லியை கிடுகிடுக்க வைத்து, கைதாகி சிறை சென்று அகில இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் முன்னாள் ராணுவ வீரரும், சமூகப் போராளியுமான அண்ணா ஹசாரே. 88 வயதாகும் இவர், மகாராஷ்டிர மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி என்ற தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரைகள், பாராளுமன்றத் தேர்தல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது என்று கடந்த சில மாதங்களில் நாடு பல பரபரப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அமைதி காத்து வந்த அண்ணா ஹசாரே, அண்மையில் வாய் திறந்திருக்கிறார்.

“நான் என்னுடைய வாழ்க்கையை பொதுப்பணிக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தபோது, என்னுடைய சொந்த கிராமத்தில் இருந்து துவங்க விரும்பினேன். அப்போது ராலேகான் சித்தி கிராமம் வறுமையில் சிக்கித் தவித்தது. தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினேன். சில ஆண்டுகளில் அதற்கு நல்ல பலன் கிடைத்தது. குடிநீர் பிரச்னை தீர்ந்து, விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைத்தது. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மக்களின் வருவாயை அதிகரித்தன. கிராமத்தில் வளர்ச்சியைக் கண்கூடாகக் காண முடிந்தது.

‘முதலில் உன் கிராமத்தை முன்னேற்று. அதன் பிறகு தேச முன்னேற்றத்தில் கவனம் செலுத்து’ என்பதற்கேற்ப, கிராமத்தில் மேம்பாடு ஏற்பட்ட பிறகு, லஞ்ச ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் துவங்கியது. எனது போராட்டத்தால், மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் தகவல் பெறும் உரிமைக்கான எனது போராட்டத்தின் பயனாக தகவல் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிறு அளவில் துவங்கிய தேசிய அளவிலான இந்தப் போராட்டத்தின் பலன்தான் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம்” என்று கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
துபாய்: 2 வருடங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… கூடும் பலி எண்ணிக்கை!
‘Modi has lust for power’ Anna Hazare Attack!

“கெஜ்ரிவாலுடன் நெருங்கிப் பழகத் துவங்கியதில் இருந்தே அவருக்கு அதிகாரத்தின் மீதும், பதவியின் மீதும்தான் ஈர்ப்பு உள்ளது; தேச முன்னேற்றம் அவரது லட்சியம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. என் பக்கத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அமர்ந்திருந்தவர், இப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார். மது விலக்கு விஷயத்தில் என்னுடன் சேர்ந்து போராடியவர், இன்று மது பானக் கொள்கை விவகாரத்தில் கைதாகி இருக்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான்! வேறு என்ன சொல்ல?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார். அதேசமயம் பள்ளிக் கல்வி தொடர்பாக கெஜ்ரிவால் அரசின் செயல்பாடுகளை ஹசாரே பாராட்டத் தவறவில்லை.

நரேந்திர மோடி நல்ல காரியங்கள் சில செய்திருக்கிறார். அதேசமயம் அவருக்கும் அதிகார ஆசை இருக்கிறது” என்று மோடி குறித்தும் அண்ணா ஹசாரே கூறுகிறார்.

logo
Kalki Online
kalkionline.com