

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. மழைக்காலங்களில் அனைவரும் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பது, எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விபரங்களை காணலாம்.
வீட்டிற்குள் பாதுகாப்பாக இருத்தல்: இடி, மின்னல் மற்றும் கனமழை பெய்யும்போது தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே இருக்கவும். கதவு மற்றும் ஜன்னல்களை நன்றாக மூடி வைக்கவும்.
குடிநீரை காய்ச்சி அருந்துதல்: குடிநீரை நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்த பிறகே அருந்த வேண்டும். சுடச்சுட சமைத்த உணவுகள், சூப், ரசம் மற்றும் கஞ்சி போன்றவற்றை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
முன்னெச்சரிக்கை பொருட்கள் & மருந்துகள்: சாதாரண காய்ச்சல், சளி, இருமலுக்கான மாத்திரைகள், டெட்டால், தைலம், கொசுவத்தி சுருள் மற்றும் அத்தியாவசிய மளிகைபொருட்களை முன்கூட்டியே வாங்கி வைக்கவும்.
அவசர விளக்குகள் & பவர் பேங்க்: மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதால் எமர்ஜென்சி விளக்குகள், மெழுகுவர்த்தி, பேட்டரி செல்கள் மற்றும் மொபைல் போன் / பவர் பேங்குகளை முழுமையாக சார்ஜ் செய்து தயாராக வைத்திருக்கவும்.
5. முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பு: குடும்ப அட்டை, ஆதார், சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிப் புத்தகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி உயரமாக உள்ள அலமாரிகளில் பத்திரப்படுத்தவும்.
6. அவசர உதவி எண்கள் சேமிப்பு: மாநில/மாவட்ட பேரிடர் மேலாண்மை எண்கள் மற்றும் மின்வாரிய உதவி எண் ஆகியவற்றை மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.
7.வீட்டு பராமரிப்பு: ஓட்டு வீடுகளின் மீது பிளாஸ்டிக் ஷீட் விரித்தல், பாத்ரூம் மரக்கதவுகளின் கீழ் அலுமினிய தகடு பொருத்துதல் மற்றும் கான்கிரீட் தளங்களில் தண்ணீர் கசிவை லீக்கேஜ் புரூப் மூலம் அடைப்பது அவசியம்.
8.பாதுகாப்பான பயணம் & ஹோம் செப்பல்: தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்லும்போது சாலையின் நடுவே கவனமாக செல்லவும் (பள்ளங்கள், மேன்ஹோல்களை தவிர்க்க). வீட்டிற்குள் ரப்பர் செருப்பு (Home Slipper) அணிவது ஈரப்பதம் மற்றும் மின்கசிவு அதிர்ச்சியிலிருந்து காக்கும்.
9.செல்லப்பிராணிகள் பாதுகாப்பு: வளர்ப்புப் பிராணிகளை மழை நீரில் நனையாதவாறு பாதுகாப்பான கூரைக்கு அடியில் கட்டி வைக்கவும்.
மின்கம்பங்கள் அருகே செல்லக்கூடாது: ஈரமான கைகளால் சுவிட்சுகளை இயக்கக் கூடாது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள் (Transformers) மற்றும் மின் பகிர்வுப் பெட்டிகள் அருகே செல்லவோ, கால்நடைகளைக் கட்டவோ கூடாது.
மின் சாதனங்களைப் பயன்படுத்துதல்: இடி, மின்னலின் போது மெயின் பவர் சப்ளையில் திடீர் மின் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்பதால் டிவி, கணினி, மிக்ஸி, செல்போன் சார்ஜர்களின் பிளக்குகளை துண்டித்து விட வேண்டும்.
மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும்: பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் என்பதால், மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களின் கீழ் நிற்பதையோ அல்லது வாகனங்களை நிறுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
மழை நேரத்தில் குளிக்கக் கூடாது: இடி, மின்னலின் போது உலோக பைப்புகள் வழியாக மின்சாரம் பாய வாய்ப்புள்ளதால் ஓடும் தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
அறுந்து கிடக்கும் கம்பிகளைத் தொடக்கூடாது: சாலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக் கூடாது; உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
6. குளிர்ச்சியான & திறந்தவெளி உணவுகள்: தயிர், வெண்ணெய், நெய் போன்ற குளிர்ச்சியான உணவுகளையும், திறந்தவெளியில் விற்கப்படும் பழச்சாறுகளையும் அருந்த கூடாது. செரிமானத்திற்கு சிரமமான அசைவ உணவுகளை குறைத்து கொள்ளவும்.
7. தண்ணீர் தேங்க விடுதல்: மொட்டை மாடி, பால்கனி மற்றும் வீட்டின் வெளிப்புறங்களில் தேவையற்ற பொருட்களைப் போட்டு வைக்கக் கூடாது. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும்.
8. கட்டுமானப் பணிகளை தொடரக் கூடாது: மழைக்காலத்தில் கான்கிரீட் தளம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களில் பணிபுரிபவர்கள் மின்னல் நேரத்தில் உலோகப் பொருட்களைக் கையாள்வதையோ, டவர் கிரேன்களை இயக்குவதையோ தவிர்க்க வேண்டும்.