
சென்னை அருகே கடந்த சில நாட்களாவே ஆமைகள் செத்து கரை ஒதுங்கி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை மெரினா முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதிகளில் அதிகளவில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தென் மண்டல பசுமை தீர்ப்பாய உறுப்பினர், புஷ்பா சத்திய நாராயணா நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த ஆமைகள் கடல் வளத்தையும், மீன் வளத்தையும் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், முதலாவது பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த வகை ஆமைகளை ஆலிவ் ரிட்லி என்று அழைப்பார்கள். பொதுவாகவே இந்த வகை ஆமைகள் தங்கள் குட்டி ஈன்ற இடத்திற்கே திரும்பி வருமாம். எவ்வளவு தூரம் சென்றாலும் தங்களது பிறந்த இடத்திற்கு வந்து தான் முட்டை ஈன்றுமாம். இந்த நடைமுறை தான் பெண்கள் முதல் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு செல்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆதி காலத்தில் இந்த ஆமைகள் தான் வழிகாட்டியாகவும் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட இந்த ஆமைகள் கொத்து கொத்தாக செத்து கரை ஒதுங்கி வருவதால் சென்னைக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஆமைகளின் தலையில் காயம் ஏற்பட்டு, அதிர்ச்சி மற்றும் மூச்சு விட முடியாமல் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போதிய தகவல்களை பெற்று வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த ஆமைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பே 900 ஆமைகள் செத்து கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை ஆமைகளுக்கு மூச்சு விடமுடியாதாம். மூச்சை குறிப்பிட்ட நேரத்திற்கு பிடித்து வைத்து தண்ணீருக்குள்ளே இருக்குமாம். மீண்டும் வெளியே வந்து மூச்சு விட்ட பிறகு நீந்தி உள்ளே செல்லும் வகையாம். இதன் இறப்பிற்கு மனிதர்களே காரணம் என்றும், மீனவர்கள் விட்டு செல்லும் வலைகளில் சிக்கி இப்படியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இது போன்று பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.