31 மாதங்களில் உருவாகி, உலக சாதனை படைத்த இந்திய கார்!

Car
Car
Published on

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரலாற்று சிறப்புமிக்க பல கார்களை உருவாக்கியுள்ளது. இதில், டாடா இண்டிகா (Tata Indica) முக்கியமானது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இண்டிகா காரை கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தொடர்ந்து 20 ஆண்டுகள் விற்பனையில் இருந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு டாடா இண்டிகா காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

எனினும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில் டாடா இண்டிகா காரின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும். வரலாற்று சிறப்புமிக்க டாடா இண்டிகா காரை பற்றி பலருக்கும் தெரியாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் ரத்தன் டாடாவிடம் ஏற்பட்டது. இந்த கனவு, 'டாடா இண்டிகா' வடிவில் 1998-ல் நிஜமானது.

டாடா இண்டிகா கார் வடிவமைப்பு புளூ பிரிண்ட் உருவான தேதியிலிருந்து கார் முழு வடிவம் பெற்று சாலை சோதனை (ரோடு டெஸ்ட்) செய்யும் வரை டாடா நிறுவனம் எடுத்துக் கொண்ட காலம் வெறும் 31 மாதங்கள். இது ஒர் உலக சாதனை என்கிறார்கள். இதற்கு முந்தைய ரிக்கார்டு ஜப்பானிய பிரபல கார் நிறுவனம் ஒரு கார் உருவாக்க எடுத்துக் கொண்டகாலம் 36 மாதங்கள்.

இதையும் படியுங்கள்:
தைப்பூசம் - 'புதிர் எடுத்தல்', 'புதிர் சமையல்', 'புதிர் விருந்து'! - இது என்ன புதிர்?
Car

இண்டிகா கார் புராஜெக்டிற்கு டாடா நிறுவனம் செலவழித்த தொகை 1,700 கோடிகள் இவ்வளவு குறைந்த செலவில் இது வரையில் யாரும் கார் புரஜெட்டில் 1400 சிசி எஞ்சின் கார் தயாரிக்கவில்லையாம்.

டாடா இண்டிகா காரின் வடிவமைப்பில் ரத்தன் டாடா அதிக ஆர்வம் காட்டினார். டாடா இண்டிகா அவருடைய மனதுக்கு மிகவும் நெருக்கமானது. ''மாருதி ஜென் காரின் பரிமாணங்களையும், அம்பாஸிடர் காரின் கேபின் அளவையும், மாருதி 800 காரின் எரிபொருள் சிக்கனத்தையும் கொண்டிருக்கும்'' என ரத்தன் டாடா கூறியிருந்தார். இந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவும் செய்தார்.

டாடா இண்டிகா கார் கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் முழு உள்நாட்டு பயணிகள் கார் என டாடா இண்டிகா விளம்பரப்படுத்தப்பட்டது.

இதுதவிர, டாடா இண்டிகா காருக்கு வரலாற்றில் இன்னும் பல்வேறு பெருமைகள் இருக்கின்றன. டீசல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்த இந்தியாவின் முதல் ஹேட்ச்பேக் கார் டாடா இண்டிகாதான்.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில், டாடா இண்டிகா காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்தன. அன்றைய காலகட்டத்தில் இது மிகப்பெரிய விஷயம் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.

இதையும் படியுங்கள்:
ஒரு கிராம் ரூ.8,000ஐ தாண்டிய தங்கம் விலை - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
Car

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் டாடா இண்டிகா காரை விற்பனை செய்தது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், டாடா இண்டிகா காரின் விற்பனை தூள் கிளப்பியது. 2006-07ம் ஆண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,44,690 இண்டிகா கார்களை விற்பனை செய்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20 ஆண்டு காலத்தில் சுமார் 15 லட்சம் இண்டிகா கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

பயணிகள் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னை வலுவாக நிலை நிறுத்தி கொள்வதற்கு இண்டிகாதான் அடித்தளம் அமைத்தது என்றால் மிகையல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com