தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுக்க உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் காலியாக இருக்கும் நிர்வாக பணியிடங்களுக்கு உரிய அறிவிப்பினை வெளியிட்டு இந்து சமய அறநிலையத்துறை நிரப்பி வருகிறது.
அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : இந்து சமய அறநிலையத் துறை
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 19
பணியிடம் : சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி : 27.11.2025
கடைசி தேதி : 28.12.2025
1. பதவி: உதவி பொறியாளர்
சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: கட்டட பொறியியலில் பொறியியல் இளநிலைப் பட்டம் (அ) பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் (இந்திய நிறுவனம்) பிரிவு ஏ மற்றும் பி-இல் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கட்டட பொறியியலை ஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும்.
2. பதவி: இளநிலை உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
3. பதவி: சீட்டு விற்பனையாளர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும்
2) அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்.
(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)
(ii) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)
(iii) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை.
ஆனால் இனம் (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை விண்ணப்பதாரர் பெறாத நேர்வில், இனம் (ii) இல் அல்லது (iii) இல் உள்ள தகுதிகளைக் பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம் கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பதவி: தமிழ் புலவர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1) யாதொரு பல்கலைகழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.Lit அல்லது B.A. அல்லது M.A. அல்லது M.Lit. பட்டம் கல்வித்தகுதி பெற்றிருத்தல் மற்றும்
2) திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருத்தல்.
5. பதவி: உதவி மின் பணியாளர்
சம்பளம்: மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1) அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2) மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து “H” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. பதவி: பாரா
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
7. பதவி: குருக்கள் அர்ச்சகர் உபக்கோயில்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றெடுக்க வேண்டும்.
8. பதவி: காவலர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
9. பதவி: உதவி பரிசாரகர்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. கோயில்களின் வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 04 என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.75/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை ஆட்டையிடனும், அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.