சிறுநீர் கழிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! - மைசூரு அதிகாரிகளின் "மாஸ்டர் பிளான்"..!

இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் பிம்பத்தைத் தாங்களே பார்க்கும்போது ஏற்படும் சங்கடத்தைப் பயன்படுத்தி, பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருக்க மைசூரு மாநகராட்சி முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mysuru's mirror-on-wall hack
Mysuru's mirror-on-wall hackimage credit-News18, India Today
Updated on

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கவும், அச்செயலை வெட்கப்படச் செய்யவும், கே.எஸ்.ஆர்.டி.சி புறநகர் பேருந்து நிலையத்திற்கு வெளியே மைசூரு மாநகராட்சி (எம்.சி.சி) அதிகாரிகள் ஒரு புதுமையான தீர்வைக் கொண்டு வந்துள்ளனர். விதிமீறுபவர்களைத் தடுக்கும் வகையில், பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பெங்களூரு-நீலகிரி சாலையில் நடைபாதை நெடுகிலும் பிரதிபலிக்கும், கண்ணாடி போன்ற துருப்பிடிக்காத எஃகுத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

85 மீட்டர் நீளமுள்ள, மெருகூட்டப்பட்ட இந்த துருப்பிடிக்காத எஃகுச் சட்டங்கள், கண்ணாடிகளாகச் செயல்பட்டு, பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முயற்சிப்பவர்களை அடையாளம் காட்டி, அந்த நடத்தையை ஊக்கமிழக்கச் செய்கின்றன.

தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வியக்கத்தக்க நடவடிக்கையால் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அதாவது மைசூரு மாநகராட்சி அதிகாரிகள், சிறுநீர் கழிக்க வாய்ப்புள்ள இடங்களை தேர்வு செய்து அங்கே பிரதிபலிக்கும் கண்ணாடிகளை பொருத்தியுள்ளனர்.

இது நல்ல மாற்றம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாது சமூக வலைத்தளத்திலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தண்ணீர் பற்றாக்குறை! வறட்சியை நோக்கி செல்லும் நாடுகள்; அச்சுறுத்தும் புள்ளிவிவரங்கள்!
Mysuru's mirror-on-wall hack

பேருந்து நிலையத்திற்குள் உள்ள பொது சிறுநீர் கழிப்பிடங்களுக்குப் பதிலாக, ஆண்கள் பெரும்பாலும் சாலையோர மழைநீர் வடிகால்களைப் பயன்படுத்தியதால், அந்தப் பகுதி துர்நாற்றத்திற்குப் பெயர்போனதாக மாறியது; இது குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் பாதித்தது.

பல்வேறு இடங்களில் எச்சரிகை பலகைகள் இருந்தபோதிலும், அடிக்கடி தூய்மை பணிகள் மேற்கொண்டும், சிறுநீர் கழிப்பதை தடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் தொடர்ந்தது.

தமிழகத்தில் பல இடங்களில் சாமி படங்களுடன் கூடிய பதாகைகள் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு திட்டமாக மைசூரு புறநகர் பஸ்நிலையத்தின் அருகே இந்த கண்ணாடி பொருத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது சிறுநீர் கழிப்பவரின் பிம்பத்தை பிரதிபலித்துவிடும் என்பதால் பலரும் அந்த இடத்தை நாகரீகம் கருதி கடந்து சென்று விடுகிறார்கள். பொது இடத்தில் கண்ணாடியில் தங்களைப் பார்த்துக் கொள்ளும்போது, ​​பெரும்பாலான மக்கள் அத்தகைய செயலில் ஈடுபட சங்கடமாக உணர்வார்கள். இதனால் அந்த பகுதி தூய்மையாக இருக்கிறது.

மைசூரு மாநகராட்சி ஆணையர் ஷேக் தன்வீர் ஆசிஃப் கூறுகையில், இந்த முயற்சி பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த நகரமாக மைசூருவின் பிம்பத்தை மேம்படுத்தவும் உதவும் என்றார்.

பிரதிபலிப்புத் தகடுகள் அப்பகுதியில் மக்கள் சிறுநீர் கழிப்பதைத் திறம்படத் தடுத்துள்ளதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதுபற்றிய காணொலி காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் பரவி வைரலானது. கண்ணில் பகுதியளவு பார்வை திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல்கள் உடனடியாக வலைத்தளத்தில் டிரெண்டிட் ஆனது.

இணையத்தில், இதற்குப் பெரும்பாலும் நேர்மறையான வரவேற்பே கிடைத்துள்ளது. பல பயனர்கள் இதை, நகர்ப்புறங்களில் பொதுவாக நிலவும் ஒரு பிரச்சனைக்கு இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வு என்று குறிப்பிட்டுள்ளனர். பல கருத்துரையாளர்கள் இந்த யோசனையை "சிறப்பான சிந்தனை" என்று பாராட்டி, இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மற்ற நகரங்களிலும் இது பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

அதில் ஒரு நபர் கூறுகையில், "இங்கே சிறுநீர் கழிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று ஒரு பலகையை வைத்திருந்தால்கூட, யாரும் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மக்களைத் தடுப்பதற்கு இதுதான் ஒரே வழி" என்றார்.

இதையும் படியுங்கள்:
நட்சத்திர உணவகங்களில் நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் சங்கடமான சூழ்நிலைகள்!
Mysuru's mirror-on-wall hack

அதே நேரத்தில், சில எதிர்வினைகளில் நகைச்சுவையும் கலந்திருந்தது; மிகச் சிலரே பொது இடத்தில் தங்களை அந்த நிலையில் காண விரும்புவார்கள் என்று பயனர்கள் கேலி செய்தனர். மேலும் சிலர், கண்ணாடிகள் சேதமடையாமல் இருக்குமா அல்லது திருட்டுக்கோ சேதத்திற்கோ உள்ளாகுமா என்று யோசித்து, பராமரிப்பு குறித்த கவலைகளையும் எழுப்பினர்.

logo
Kalki Online
kalkionline.com