இலவச திட்டங்கள் கொடுக்க அரசாங்கம் தேவையில்லை...அது ஜவுளிக்கடையின் வேலை - சீமான்

Nam Tamilar Party
Seeman Speech
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் நிலையில், இன்று (ஏப்ரல்.17) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் செங்கல்பட்டில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் இலவச திட்டங்கள் கொடுக்க கவர்மெண்ட் தேவையில்லை, அது ஜவுளிக்கடையின் வேலை. ஆடித்தள்ளுபடி, அமாவாசை தள்ளுபடி, தீபாவளி தள்ளுபடி என்பதெல்லாம் அவர்களின் வேலை.

ஒரு அரசாங்கத்தின் கடமை கல்வி, மருத்துவம், குடிநீர் வினியோகம் ஆகியவை தான். நடிகர் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் " சேலை வேட்டி கேட்காதீங்க டா , வேலை வெட்டி கேளுங்கடா" என்று கூறுவார். எம்ஜிஆர் "பத்து ரூபாய் கொடுப்பவனை பார்த்து ஓட்டு போடாதீர்கள், பசியை போக்குபவனுக்கு ஓட்டு போடுங்கள்" என்று கூறியுள்ளார். ஆனால், அவரது கட்சியினர் 10,000 ரூபாய் டோக்கன் கொடுக்கின்றனர்.

அறிஞர் அண்ணாவிடம் " அரசின் வருமானத்தை பெருக்க சாராயக்கடை திறங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு அவர் "அந்த காசு குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணை போன்றது" என்று கூறியிருக்கிறார். அவரது பேரைச் சொல்லி ஆட்சியில் இருப்பவர்கள் அந்த வெண்ணையை சாப்பிடுகின்றனர். இவ்வாறு இன்றைய பிரச்சாரத்தில் சீமான் , ரஜினி,எம்ஜி ஆர், அண்ணா உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
3 நரசிம்மர் ஆலயங்கள் - ஒரே நாளில் தரிசித்தால் இவ்வளவு நன்மைகளா?
Nam Tamilar Party
logo
Kalki Online
kalkionline.com