அச்சச்சோ..! இப்படி ஆயிடுச்சே..! வீடு நிறைய பணம்.. யூடியூபர் வீடியோ வெளியிட்ட நிலையில் கொள்ளை..!

நாகர்கோவிலில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்த்து வீட்டின் பூட்டை அறுத்து ₹1 கோடி மதிப்பிலான நகை-பணம் கொள்ளை!
யூடியூபர் வீட்டில் கொள்ளை
யூடியூபர் வீட்டில் கொள்ளைsource:twitter
Updated on: 

பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முன்னதாக, இவர் தனது வீட்டில் இருக்கும் பணம் நகை வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் தங்களது சொந்த வாழ்க்கையும் ஆடம்பரத்தையும் பகிரங்கமாக வெளியிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு எச்சரிக்கை மணியாக நாகர்கோவிலில் ஒரு திடுக்கிடும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (36). ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வரும் இவரது மனைவி மதுமிதா (29). யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த மதுமிதா, தான் வாங்கும் புதிய தங்க நகைகள், கழுத்து நிறைய அணிகலன்கள் மற்றும் வீட்டில் மெத்தையில் அள்ளிப்போட்டு கட்டுக்கட்டாக இருக்கும் பணம் போன்றவற்றை ரீல்ஸ்களாக எடுத்து தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும், இவர்கள் எந்த நேரத்திற்கு எங்கு செல்கிறார்கள் என்ற அனைத்து விவரங்களையும் இன்ஸ்டாவில் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். இந்த வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிகின்றன என்ற மகிழ்ச்சியில் அவர் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளார்.

மதுமிதாவின் சமூக வலைதள பதிவுகளை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்த மர்ம நபர்கள், அக்குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற தருணத்திற்காகக் காத்திருந்தனர்.சரியான நேரம் பார்த்து, வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் (மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி) ஆகியவற்றைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

வெளியே சென்றிருந்த தம்பதியினர் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு உறைந்துபோயினர். இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பதிவுகளை வைத்தே கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை கச்சிதமாக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகத் தங்களது இருப்பிடம், நகை, பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரங்கமாகத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதுபோன்ற பதிவுகள் குற்றவாளிகளுக்கு எளிதான வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தேதி 20 ஆச்சு... பேங்க்ல பணம் வரல! - மனதை உலுக்கும் முதியோர் தம்பதியின் பேட்டி!
யூடியூபர் வீட்டில் கொள்ளை
logo
Kalki Online
kalkionline.com