#BREAKING : வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னே தொகுதியை அறிவித்தார் நயினார் நாகேந்திரன்..!

nainar nagendran - eps
nainar nagendran - epssource:dailythanthi
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். இவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.இந்நிலையில் தான் தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் நயினார் நாகேந்திரன் இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் இந்த முறை நெல் லையை விட்டு சாத்தூரில் போட்டியிட உள்ளதாக ஆரம்பம் முதலே செய்திகள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், “அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும் என்றும் தான் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் தனது தொகுதியை நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: மத்திய அரசு செக்..! மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறான கேள்வி கேட்டால் ஜெயில் தான்..!
nainar nagendran - eps
logo
Kalki Online
kalkionline.com