"இதுதான் மாற்றமா திரு.ஜோசப் விஜய் அவர்களே?" தவெக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்..!

காஞ்சிபுரம் அரசுப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் புகுந்து முதலமைச்சர் விஜய் படம் காட்டி வீடியோ எடுத்ததற்கு பாஜக கடும் கண்டனம்.
விஜய் நயினார் நாகேந்திரன்
விஜய் நயினார் நாகேந்திரன் Source:indianexpresstamil
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

காஞ்சிபுரம் மாவட்டம், தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், அதே பகுதியை சார்ந்த தவெக நிர்வாகிகள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர், தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் உடன் சென்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் படத்தை காண்பித்து, "இவர் யாரென்று தெரிகிறதா? இவர் தான் முதலமைச்சர். உங்களுக்கு மாமா. எங்களுக்கு அண்ணன்" என பேசியுள்ளனர்.

மேலும், இதனை மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் வீடியோ எடுத்து, அதை ரீல்ஸாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அத்துடன், எந்த ஒரு உள்ளாட்சி பொறுப்பிலும் இல்லாமல், தவெக துண்டை அணிந்து கொண்டு அரசு அதிகாரிகள் போல் பள்ளி மாணவர்கள் பயிலும் வகுப்பிற்குள் நுழைந்து, மாணவர்களின் பாடவேளையில் கல்வி கற்கவிடாமல் இடையூறு செய்துள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கீழ் கண்டவாறு கூறியுள்ளார்.

உத்திரமேரூர் தவெக ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் அவர்களும் ஆச்சரியக்குறிகள் சிலரும் அரசுப்பள்ளி ஒன்றில் புகுந்து உங்களின் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்து, படிக்கும் பிள்ளைகளின் நேரத்தை வீணடித்த செய்தியை அறிவீர்களா? அல்லது தவெகவினர் அரசுப் பள்ளிகளில் கேக் வெட்டுவதும் ஆய்வு என ரீல்ஸ் எடுப்பதும் வழக்கம் தானே என இதையும் கடந்து விட்டீர்களா?

தீய சக்தி திமுகவினர் அரசுப் பள்ளிகளில் நாடக முகாம் நடத்தி பிள்ளைகளின் கல்வியை சீரழித்தனர். "தூய சக்தி" தவெகவினரோ அரசுப் பள்ளியை நாடக மேடையாகவே மாற்றி சூட்டிங் நடத்துகின்றனர். இதுதான் மாற்றமா திரு. ஜோசப் விஜய் அவர்களே? ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல பள்ளிக்கூடமும் தரமான கல்வியும் வழங்குவதை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக ரீல்ஸ் எடுத்து விளம்பரம் தேடுவது நியாயமா bro?

என்று தனது எக்ஸ் தளத்தில் கூறியிருக்கிறார்.

nainar nagendran
nainar nagendransource:dailythanthi

அரசுப் பள்ளிகள் தவெகவின் விளம்பரக் கூடமா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவினர் அரசுப் பள்ளிகளை நாடக மேடையாக மாற்றி தங்களது கட்சியின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்வியையும், நல்ல பள்ளிக்கூடத்தையும் வழங்குவதை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக ரீல்ஸ் எடுத்து விளம்பரம் தேடுவது நியாயமா என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருப்பூர் நஞ்சப்பா அரசுப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, அரசுப் பள்ளிகளை தவெகவினர் விளம்பரத் தளங்களாகப் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மாணவர் சேர்க்கையின் பொழுது கட்டணம் வசூலிப்பது போன்ற அடிமட்ட முறைகேடுகள் அரசுப் பள்ளிகளில் நடப்பதாகவும், இதற்கு முதல்வர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்றும் ஏற்கனவே கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் தவெக அரசு சினிமா சூட்டிங் நடத்துவது போல் நடைபெறுவதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளில் அரசு மிகவும் மெத்தனம் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பள்ளிக் கல்வியை மேம்படுத்தாமல் வெறும் சுய விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
திமிருக்கான பரிசு தான் இந்த தோல்வி..விஜய் வெற்றி மற்றும் திமுக தோல்வி குறித்து போஸ் வெங்கட் பேட்டி.!
விஜய் நயினார் நாகேந்திரன்
logo
Kalki Online
kalkionline.com