

நயாரா எனர்ஜி, நாடு முழுவதும் 6800-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பம்புகளைக் கொண்டுள்ளதுடன், நுகர்வோர் திருப்தியை உறுதி செய்வதற்காக எரிபொருள் சில்லறை விற்பனைப் பிரிவில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக மற்றும் சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை காரணமாக நயாரா எனர்ஜி (Nayara Energy), பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.இதற்கு முக்கிய காரணம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதே...
இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 160 டாலர் வரை உயர்ந்துள்ளது.இந்தச் சூழலில், நயாரா நிறுவனம் தனது சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.00 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நயாரா பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.97.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சாதாரண பெட்ரோல், டீசல் விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை.