மக்களிடம் 10 ரூபாய் மடிப்பிச்சை ஏந்தி டெபாசிட்.. இன்று அமைச்சரையே வீழ்த்தி எம்.எல்.ஏ..!

Nedungadu vigneshwaran
Nedungadu vigneshwaransource:dinamani
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி என 5 மாநிலங்களிலும் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிய கட்சியான தவெக விற்கு கிடைத்த வரலாறு காணாத வெற்றி முடிவுகள் கட்சிகள் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் பெற்று வருகிறது.

தேர்தல் முடிவுகளில் ஒரு ஓட்டில் தோற்றவர், வேட்பாளர் யாரென்று தெரியாத நிலையிலும் ஜெயித்தவர், பெரும்பாலான வெற்றி பெறுவார் என நினைத்த தலைவரின் தோல்வி என பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தேறியது. இதேபோல் புதுவையிலும் ஒரு ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி புதுவையில் ஆளும் கட்சியான என்.ஆர்.ஐ காங்கிரஸ் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2வது முறை ஆட்சியைக் கைப்பற்றியது.தற்போதைய முதல்வர் என்.. ரங்கசாமி தனது தொகுதியில் வெற்றி அவர் தலைமையிலேயே மீண்டும் அரசு உருவாக வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் என் ஆர் ஐ காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் சந்திரபரியங்காவுக்கு எதிராக களம் இறங்கிய சுயேச்சை வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார் . இதில் என்ன சுவாரஸ்யம் என்று நினைக்கிறீர்களா? டெபாசிட் பணம் செலுத்த அவர் தன் தொகுதி மக்களிடமே கையேந்தியதுதான் சிறப்பு.

புதுவையின் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு ( தனி) சட்டசபை தொகுதியில் ஆளும் கட்சி அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த சந்திரபிரியங்காவுக்கு மீண்டும் போட்டியிட என் ஆர் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியது. இந்த தேர்தலில் அவருக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் டாக்டர் விக்னேஸ்வரன் என்பவர் பல முக்கிய பிரமுகர்கள் ஆதரவுடன் களத்தில் இறங்கினார்.

ஏற்கனவே மக்களுக்கு நன்கு அறிமுகமாகி நல்ல பெயர் எடுத்திருந்த அவர் வேட்பு மனுத் தாக்கல் போது நெடுங்காடு தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அதையே டெபாசிட் செய்ய விரும்பினார். அதற்காக அவர் பூவம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தனது ஆதரவாளர்களைக் கூட்டினார்.

பின் அங்கிருந்த பொதுமக்களிடம் தேர்தலில் போட்டியிடும் எனது டெபாசிட் பணம் உங்களது பணமாக இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொருவரும் ரூபாய் பத்து மட்டும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டதால் உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் துண்டை போட்டு மடிப்புச்சை ஏந்திய அவருக்கு போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுத்து ஆசீர்வாதம் வழங்கினர்.

அங்கு பொது மக்களிடம் வசூலிக்கப்பட்ட ரூபாய் 5 ஆயிரத்தை அந்தக் கோவிலில் வைத்த பூஜை செய்துவிட்டு அதனுடன் டெபாசிட் செய்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த வீடியோ சமூக வளைத் தளங்களில் வெளிவந்து வைரலானது. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்து எதிர்த்து போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளரான சந்திர பிரியங்காவை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளராக விக்னேஸ்வரன் வெற்றி வாகை சூடினார்.

விக்னேஸ்வரன் 14,368 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார் .சந்திர பிரியங்கா 9869 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார் . சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றது ஆளும் கட்சிக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தன்னை நம்பிய மக்கள் பணத்தையே வாங்கி அவர்கள் அளித்த ஓட்டுகளால் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளரின் இந்த புதிய வியூகம் பாராட்டுக்குரியது என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்.!
Nedungadu vigneshwaran
logo
Kalki Online
kalkionline.com