2026 நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய சான்றிதழ்கள் - சிறு வழிகாட்டி கைடு..!

NEET Exam
NEET Exam
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

NEET 2026: விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்

தேவையான ஆவணங்கள் (Scanned Copies):

  1. புகைப்படங்கள் (Photos):

    • பாஸ்போர்ட் அளவு: சமீபத்தில் எடுத்த வெள்ளை பின்னணி (White background) கொண்ட புகைப்படம். முகம் 80% தெரிய வேண்டும் (தொப்பி, மாஸ்க், கூலிங்கிளாஸ் தவிர்க்கவும்).

    • போஸ்ட் கார்டு அளவு (4" x 6"): பாஸ்போர்ட் அளவை போன்றே அதே தெளிவுடன் இருக்க வேண்டும்.

  2. கையொப்பம் (Signature): வெள்ளை காகிதத்தில் கருப்பு நிறப் பேனாவால் இடப்பட்ட கையெழுத்து (முழுப் பெயரையும் எழுத வேண்டும், சுருக்கெழுத்து தவிர்க்கவும்).

  3. கைரேகைப் பதிவு (Thumb Impression): வெள்ளை காகிதத்தில் இடது கை பெருவிரல் ரேகை (Left Hand Thumb Impression).

  4. கல்விச் சான்றிதழ்கள்:

    • 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பிறந்த தேதி மற்றும் பெயர் சரிபார்ப்பிற்கு).

    • 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (தேர்ச்சி பெற்றவர்களுக்கு).

  5. சாதிச் சான்றிதழ் (Category Certificate): SC / ST / OBC-NCL / EWS பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD) உரிய சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

  6. அடையாள அட்டை (Identity Proof): ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது PAN கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.

NEET பதிவு செய்யும் முன் உங்கள் கைகளில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டியவை

செயல்படும் Mobile Number , Email ID

தகுதிகள் மற்றும் முக்கியக் குறிப்புகள்

  • வயது வரம்பு: 31 டிசம்பர் 2026-க்குள் குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.

  • கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரித் தொழில்நுட்பம் (Physics, Chemistry, Biology/Biotechnology) மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். 2026-இல் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  • தொடர்பு விபரங்கள்: ஒரு நிரந்தரமான மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (Email ID) அவசியம். Gmail பயன்படுத்துவது OTP சிக்கல்களை குறைக்க உதவும்.

தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் (Common Mistakes)

பெயர் குழப்பம்: 10-ஆம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடியே விண்ணப்பத்தில் பெயர் மற்றும் தந்தை பெயர் இருக்க வேண்டும்.

புகைப்படத் தவறு: பழைய அல்லது தெளிவற்ற புகைப்படங்களை பதிவேற்றுவதைத் தவிர்க்கவும்.

நிதியுறுதிப் பக்கம் (Confirmation Page): விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு 'Confirmation Page'-ஐப் பதிவிறக்கம் செய்ய மறக்காதீர்கள்; இதுவே உங்கள் விண்ணப்பத்திற்கான ஆதாரம்.

தவறான பிரிவு: சாதிப் பிரிவைத் (Category) தேர்வு செய்யும்போது மிகுந்த கவனம் தேவை, ஏனெனில் பின்னர் மாற்ற இயலாது.

உதவிக்காக சில முக்கிய டிப்ஸ் :

Gmail பயன்படுத்தினால் OTP issue குறையும். எல்லா ஆவணங்களும் scanned copy ஆக இருக்க வேண்டும்

NTA குறிப்பிடும் file size & format (JPG/JPEG/PDF) பின்பற்ற வேண்டும்.

பெயர், பிறந்த தேதி அனைத்தும் 10ஆம் சான்றிதழுடன் ஒத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எடுத்தால் குறைவது செல்வம்; கொடுத்தால் வளர்வது கல்வி!
NEET Exam
logo
Kalki Online
kalkionline.com