NEET முதுகலைத் தேர்வு 2026: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே அவகாசம்!

ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்; முக்கிய நிபந்தனைகளை உடனே கவனியுங்கள்.
NEET PG
NEET PGAI Image
Updated on

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MD, MS போன்ற முதுகலை படிப்புகளில் சேருவதற்கான NEET-PG 2026 நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 30-ம்தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. நீட் முதுநிலைத் தேர்வுக்கு வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 30ம்தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்டி - எம்எஸ் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும் முதுநிலை மருத்துவப் படிப்பில் (MD, MS, DNB) சேர, எம்பிபிஎஸ் (MBBS) முடித்தவர்கள் நீட் (NEET PG) நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் (MD/MS/PG Diploma Courses) படிப்பதற்கு இந்த தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியத்தால் அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது.

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NTA) மூலமாகவோ அல்லது தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதலின்படியோ இதற்கான சேர்க்கை நடைபெறுகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் NEET PG தேர்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இத்தேர்வுகள் 2013-ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30-ம்தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை (நேற்று) 1-ம்தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது.

மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 21-ம்தேதி நள்ளிரவு 11.55 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

NEET-PG 2026
NEET-PG 2026image credit-@DDTamilNews

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் natboard.edu.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்தை 3 மாதத்திற்குள் எடுத்த புகைப்படத்துடன் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு மையம் குறித்த அறிவிப்பு ஆகஸ்டு 11-ம்தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் செப்டம்பர் 30-ம்தேதி வெளியிடப்படும். 2026 செப்டம்பர் 30-க்குள் கட்டாய சுழற்சி முறை மருத்துவப் பயிற்சியை (Rotatory Internship) முடித்திருக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அல்லது மாநில மருத்துவக் கவுன்சிலில் (SMC) பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு..! அபராத தொகை ரூ.2,500ஆக அதிகரிப்பு..!!
NEET PG

இந்த ஆண்டு தேர்வுக்கான மாநிலம், தேர்வு நகரம் அல்லது தேர்வு மையம் ஒதுக்கீடு என்பது ‘முதலில் வருபவருக்கு முதலில் முன்னுரிமை’ (First Come First Serve) என்ற வழக்கமான அடிப்படையில் அமையாது எனத் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனால் முன்னதாகவே விண்ணப்பம் செய்பவர்களுக்கு தேர்வு எழுத குறிப்பிட்ட மாநிலம், தேர்வு மையம், நகரம் ஒதுக்கீடு செய்வதற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது என்பதை தேர்வர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, கடந்த மே 3-ம்தேதி நடந்தது. அதில் நடந்த முறைகேடு காரணமாக, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு ஜூன் கடந்த 21-ம் தேதி நடந்தது.

இதையும் படியுங்கள்:
இனி 12% மேல் ஆல்கஹால் உள்ள இருமல் சிரப், டானிக் வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்!
NEET PG

சில நாட்களுக்குள், தேர்வு முடிவுகள் வெளியிட, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com