BJP vs CJP..! ஒரு நாள் அவகாசம் கேட்ட மத்திய அரசு..! தீவிரமடையும் நீட் போராட்டம்.!

நீட் போராட்டம் காரணமாக டெல்லியில் மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்
நீட் போராட்டம்
Neet Protest
Updated on

நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 4 நாட்களாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர். இக்கட்சியுடன் சேர்ந்து பல்வேறு மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகைளை ஏற்படுத்திய மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னையிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் உடன் இன்று 2-வது முறையாக சமாதானப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டது. இதன்படி மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேஅதிர சிங் ஆகியோர் காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் முடிவெடுக்க நாளை வரை அவகாசம் தேவை என மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் - என்னென்ன வாய்ப்புகள்? மாணவர்களே, இத தெரிஞ்சுக்கோங்க!
நீட் போராட்டம்

பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் நடுநிலையானதாக இருக்க வேண்டும் என காக்ரோச் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இதனால் டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்த்தில் பேச்சுவார்த்தை நடந்தது. மத்திய அரசுடன் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் 3 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

1. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

2. நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனைத்து மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

3. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூடாது மற்றும் மாணவர்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காக்ரோச் ஜனதா கட்சியின் 2 கோரிக்கைகள் மீது, மத்திய அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இருதரப்பினர் இடையே 3-வது முறையாக நாளை (ஜூலை 25) மீண்டும் பேச்சுவார்த்தயில் ஈடுபட உள்ளனர்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை கடந்த 3 நாட்களாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி மெட்ரோவும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவு நீதிமன்றம்:

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 27-ல் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று விரைவு நீதிமன்றத்தை அமைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

நீட் போராட்டம்
நீட்
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி இரண்டே நாட்களில் சாதி சான்றிதழ்: தமிழக அரசு அதிரடி!
நீட் போராட்டம்

நீட் தேர்வுக்கான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடையும் நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் வெளியிட்ட வீடியோவில், “நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான தீர்மானம் குறித்து இன்று மக்களவையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இந்த பிரச்சினையை விரைவில் முடிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். இதற்கான மசோதோ அடுத்த வாரத்திலேயே தாக்கல் செய்யப்படும். மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்” என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்களை பாதுகாக்க வேண்டுமெனில் வீடியோ நள்ளிரவில் வெளியிடக் கூடாது; நீட் தேர்வை ரத்து செய்வதோடு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com